Video: பும்ராவைப் போல் பந்துவீசும் ஆஸ்திரேலிய சிறுவன்!

#JaspritBumrah might no longer be in Australia ODI Series | ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் பும்ராவுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. #AUSvIND

news18
Updated: January 9, 2019, 2:14 PM IST
Video: பும்ராவைப் போல் பந்துவீசும் ஆஸ்திரேலிய சிறுவன்!
#JaspritBumrah might no longer be in Australia ODI Series | ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் பும்ராவுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. #AUSvIND
news18
Updated: January 9, 2019, 2:14 PM IST
இந்திய வேகப்பந்து வீச்சாளர் பும்ராவைப் போல், ஆஸ்திரேலிய சிறுவன் பந்துவீசும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி, 3 விதமான கிரிக்கெட் தொடர்களில் விளையாடி வருகிறது. முதலில் நடந்த டி-20 தொடர் 1-1 சமனில் முடிந்தது. இதனை அடுத்து, 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்றது.

டெஸ்ட் தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றிய இந்திய அணி, ஆஸ்திரேலிய மண்ணில் முதல் முறையாக டெஸ்ட் தொடரை வென்று வரலாறு படைத்தது. 71 ஆண்டுகால இந்திய அணியின் தாகத்தை தீர்க்க பேட்டிங்கில் புஜாராவும், பந்துவீச்சில் பும்ராவும் முக்கிய காரணமக இருந்தனர்.

Bumrah, பும்ரா
ஆஸ்திரேலிய அணியின் விக்கெட்டை வீழ்த்திய மகிழ்ச்சியில் பும்ரா. (BCCI)


இந்த தொடரில் மட்டும் பும்ரா, 21 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். அதில், ஒரு இன்னிங்சில் 6 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். டெஸ்ட் தொடரைத் தொடர்ந்து, 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் வரும் 12-ம் தேதி தொடங்க உள்ளது. இதற்கான இந்திய அணியில் பும்ரா இடம்பெறவில்லை. அவருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.

Bumrah, பும்ரா
அறிமுக ஆண்டிலேயே அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய பும்ராவை கைகளைத் தட்டி பாராட்டும் இந்திய வீரர்கள். (Twitter)


விராட் கோலி தலைமையிலான டெஸ்ட் அணியில் இடம்பெற்ற மிகச்சிறந்த வேகப்பந்து வீச்சாளராக பும்ரா பார்க்கப்படுகிறார். இந்நிலையில், பும்ராவைப் போல், ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த சிறுவன் பந்துவீசும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Loading...



இதனைக் கண்ட பும்ரா, “அந்த குழந்தை மிகவும் அழகாக இருக்கிறது. அவருக்கு என்னுடைய வாழ்த்துக்கள்” என ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.



2034-ம் ஆண்டு நடைபெறும் இந்தியா - ஆஸ்திரேலியா தொடரில் இந்த சிறுவன் மிகவும் ஆக்ரோசமாக பந்துவீசுவார் என சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் கூறியுள்ளது.



சிட்னி வந்து சேர்ந்தது இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணி!

Also See..

First published: January 9, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்