கோலியின் இந்த ரியாக்ஷனுக்கு உங்கள் கமெண்ட் என்ன? பிசிசிஐயால் வைரலான போட்டோ

கோலியின் இந்த ரியாக்ஷனுக்கு உங்கள் கமெண்ட் என்ன? பிசிசிஐயால் வைரலான போட்டோ
விராட் கோலி
  • News18
  • Last Updated: October 21, 2019, 7:41 PM IST
  • Share this:
தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியின்போது எடுக்கப்பட்ட கேப்டன் விராட் கோலியின் வித்தியாசமான முகபாவனை கொண்ட புகைப்படத்தை பி.சி.சி.ஐ ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. அந்தப் புகைப்படம் தற்போது வைரலாகிவருகிறது.

இந்தியா - தென்ஆப்பிரிக்கா அணிகள் மோதும் மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில், இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்று கோப்பையை இந்தியா கைப்பற்றியுள்ளது. தற்போது மூன்றாவது டெஸ்ட் போட்டி ராஞ்சி மைதானத்தில் நடைபெற்றுவருகிறது.

அந்தப் போட்டியின் தென் ஆப்பிரிக்கா பேட்டிங்கின்போது, விராட் கோலி பீல்டிங் செய்யும்போது வித்தியாசமான ரியாக்சன் கொடுத்துள்ளார். அந்தப் புகைப்படத்தை ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட பி.சி.சி.ஐ, ’கேப்சன் திஸ்’ என்று குறிப்பிட்டிருந்தது. அந்தப் புகைப்படத்துக்கு நெட்டிசன்கள் பலரும் பல்வேறு கமெண்ட்களை பதிவிட்டுவருகின்றன. அந்தப் புகைப்படம் இணையத்தில் வைரலாகிவருகிறது.Also see:

First published: October 21, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்