தோனியைப் பின்பற்றிய விராட் கோலி: மயங்க் ஓபன் டாக்!

#ViralKohli does an #MSDhoni | இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலிய மண்ணில் முதல் முறையாக டெஸ்ட் தொடரை வென்று 71 ஆண்டுகால தாகத்தை தீர்த்தது. #AUSvIND

Web Desk | news18
Updated: January 10, 2019, 8:17 PM IST
தோனியைப் பின்பற்றிய விராட் கோலி: மயங்க் ஓபன் டாக்!
பார்டர் - கவாஸ்கர் கோப்பையை கையில் வைத்திருக்கும் மயங்க் அகர்வால். (ICC )
Web Desk | news18
Updated: January 10, 2019, 8:17 PM IST
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் கேப்டன் விராட் கோலி, முன்னாள் கேப்டன் தோனியைப் பின்பற்றியதாக இளம் வீரர் மயங்க் அகர்வால் கூறியுள்ளார்.

மகேந்திர சிங் தோனி, இந்திய கிரிக்கெட் அணியின் வெற்றிக் கேப்டனாக பல ஆண்டுகளாக இருந்தார். தற்போது விக்கெட் கீப்பர் மற்றும் பேட்ஸ்மேனாக அணியில் விளையாடி வருகிறார். எவ்வளவு பெரிய இக்கட்டான நிலையிலும் தோனி களத்தில் மிகவும் மவுனமாகவே இருப்பார்.

தோனி, கோலி, Kohli
தோனி மற்றும் விராட் கோலி. (PTI)


போட்டியில் வெற்றி பெற்ற பிறகும், அவர் பெரிய அளவில் ஆரவாரம் செய்ய மாட்டார். அதேநேரத்தில், போட்டி முடிந்தபிறகு, அணியில் இளம் வீரராக இருப்பவர் அல்லது அறிமுக வீரரிடம் வெற்றிக் கோப்பையை கொடுப்பதை தோனி வழக்கமாக வைத்திருந்தார். அவரின் எதார்த்தமான செயலைப் பல்வேறு நேரங்களில் பார்த்திருக்கலாம்.

Virat Kohli, இந்திய கிரிக்கெட் அணி
இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணி. (File)


தோனியின் அமைதியான மனநிலைக்கு நேர் எதிரானவர் தற்போதையக் கேப்டன் விராட் கோலி. மைதானத்தில் ஆக்ரோசமாக கோலி செயல்படுவார். ஆனால், ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் தோனியைப் போல், கோலி செயல்பட்டுள்ளார்.

விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலிய மண்ணில் முதல் முறையாக டெஸ்ட் தொடரை வென்று 71 ஆண்டுகால தாகத்தை தீர்த்தது. பரிசளிப்பு விழாவில் கோப்பையை வாங்கிய விராட் கோலி, அறிமுக வீரர் மயங்க் அகர்வாலிடம் கொடுத்தார்.
Loading...
Mayank Agarwal, மயங் அகர்வால்
இந்திய அணியின் தொப்பியை வாங்கிய மகிழ்ச்சியில் அறிமுக வீரர் மயங் அகர்வால். (BCCI)


இதுகுறித்து மயங்க் அகர்வால் கூறுகையில், “இது மிகப்பெரிய வெற்றி. எனக்கும், அணிக்கும் மிகவும் பெருமையான தருணம். அனைவரும் வெற்றி மேடையில் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது, கோப்பை வைத்திருக்குமாறு கோலி என்னிடம் கூறினார். ஒரு கிரிக்கெட் வீரருக்கு இது மிகப்பெரிய தருணம்” என்று கூறினார்.

தோனியின் பயிற்சியைப் பார்க்க வந்த 87-வயது மூதாட்டி!

Also Watch...

First published: January 10, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...