”எனது தங்கையுடன் தனிமையில் இருப்பார்...” சக வீரர் அணியில் இல்லாததற்கு டு பிளெசிஸ் சொன்ன காரணம்

”எனது தங்கையுடன் தனிமையில் இருப்பார்...” சக வீரர் அணியில் இல்லாததற்கு டு பிளெசிஸ் சொன்ன காரணம்
  • Share this:
தனது அணியில் சகவீரர் இடம்பெறாதற்கு என்ன காரணம் என டாஸ் போடும் போது டு பிளெசிஸ் வெளிப்படையாக பேசியது அனைவரையும் ஆச்சரியப்படுத்தி உள்ளது.

தென்னாப்பிரிக்காவில் நடைபெறும் உள்ளூர் டி20 போட்டியில் பார்ல் ராக்ஸ் அணியும் - நெல்சன் மண்டேலா கெயின்ட்ஸ் அணியும் மோதின. பார்ல் ராக்ஸ் அணியின் கேப்டனாக டு பிளெசிஸ் உள்ளார்.

இந்த போட்டியில் டாஸ் போட்ட பின்னர், டு பிளெசிஸ் பேசுகையில், “எங்களது அணியில் மாற்றம் உள்ளது. ஹார்டஸ் வில்ஜோன் இன்று விளையாட மாட்டார். ஏனென்றால் அவர் இன்று என் சகோதாரி உடன் படுக்கையில் இருப்பார். இவர்கள் இருவருக்கும் நேற்று(போட்டிக்கு முதல் நாள்) தான் திருமணமானது“ என்றார்.

டு பிளெசிஸ் வெளிப்படையாக பேசியதை கேட்ட வர்ணனையாளர் சட்டென சிரித்து விடுவார். 35 வயதான டு பிளெசிஸ் சகோதாரி ரெமி ரைனர், ஹார்டஸ் வில்ஜோனை திருமணம் செய்தார்.

தென்னாப்பிரிக்கா உள்ளூர் டி20 போட்டியில் டு பிளெசிஸின் பார்ல் ராக்ஸ் அணி 10 போட்டிகளில் விளையாடி 7 போட்டிகளில் வெற்றியும் 3 தோல்வியும் அடைந்து புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.
First published: December 9, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading