• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராக விக்ரம் ராத்தோர் முயற்சி?

இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராக விக்ரம் ராத்தோர் முயற்சி?

விக்ரம் ராத்தோர்

விக்ரம் ராத்தோர்

இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக ஏறக்குறைய ராகுல் திராவிட் வந்து விடுவார், அவருக்கு ரவிசாஸ்திரியை விடவும் சம்பளம் அதிகம் என்று கூறப்பட்டு வரும் நிலையில் பேட்டிங் கோச் விக்ரம் ராத்தோரும் தலைமைப் பயிற்சியாளர் பொறுப்புக்கு விண்ணப்பிக்கவிருக்கிறார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

  • Share this:
    இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக ஏறக்குறைய ராகுல் திராவிட் வந்து விடுவார், அவருக்கு ரவிசாஸ்திரியை விடவும் சம்பளம் அதிகம் என்று கூறப்பட்டு வரும் நிலையில் பேட்டிங் கோச் விக்ரம் ராத்தோரும் தலைமைப் பயிற்சியாளர் பொறுப்புக்கு விண்ணப்பிக்கவிருக்கிறார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

    அக்டோபர் 26ம் தேதிக்குள் இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் பொறுப்புக்கு விண்ணப்பம் அளிக்க வேண்டும், பிற பதவிகளுக்கு விண்ணப்பம் சமர்ப்பிக்க இறுதி நாள் நவம்பர் 3ம் தேதி என்று பிசிசிஐ செயலர் ஜெய் ஷா அறிவித்துள்ளார். டி20 உலகக்கோப்பைக்குப் பிறகு ரவிசாஸ்திரி விலகுகிறார், ஏனெனில் அவருக்கு 60 வயது அதன் பிறகு ஆகிவிடும் எனவே நீடிக்க முடியாது.

    ரவி சாஸ்திரி தன் பழைய ஜாலி தொழிலான வர்ணனைக்கு வந்து விடுவார் அல்லது ஏதாவது ஐபிஎல் அணியைப் பிடித்துக் கொண்டு பயிற்சியாளராக உட்கார்ந்து விடுவார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. தலைமைப் பயிற்சியாளருக்கு பதவிக்காலம் 2 ஆண்டுகள் அளிக்கப்படும், எனவே இப்போது தலமைப் பயிற்சியாளரானால் 2023 உலகக்கோப்பை வரை நீடிப்பார் என்று தெரிகிறது.

    ரவிசாஸ்திரியுடன் பாரத் அருண், ஆர்.ஸ்ரீதர் ஆகியோரும் செல்கின்றனர், அதனால் பாரத் அருண் இடத்துக்கு பயிற்சியாளரைத் தேர்வு செய்வது கடினம் ஏனெனில் அருண் மிக அருமையாக ஒரு வேகப்பந்து வீச்சுக்கூட்டணியை அமைத்துக் கொடுத்தார். இவரை தக்க வைக்கலாம் என்றே தோன்றுகிறது.

    இன்னொரு தகவல் என்னவெனில் ஆங்கில ஊடகம் ஒன்றின் கணிப்பின் படி 2019ம் ஆண்டு அணியில் பேட்டிங் கோச்சாக இணைந்த விக்ரம் ராத்தோர் தலைமைப் பயிற்சியாளர் பொறுப்பிற்கு விண்ணப்பிக்கலாம் என்று கூறப்படுகிறது. இவர் ரவி சாஸ்திரி போனாலும் 2 ஆண்டுகளுக்கு பேட்டிங் பயிற்சியாளராகத் தொடர்வார், ஆனாலும் இவர் தலைமை கோச் பதவிக்கும் போட்டியிடுகிறார்.

    இந்திய வீரர்கள் மத்தியில் விக்ரம் ராத்தோருக்கு செல்வாக்கு இருக்கிறது என்று கூறப்படுகிறது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Muthukumar
    First published: