ஹர்திக் பாண்டியா, ராகுலுக்கு பதிலாக மாற்றுவீரர்கள் அறிவிப்பு!

#VijayShankar and #ShubmanGill added in Indian Squad | ஹர்திக் பாண்டியா மற்றும் கே.எல்.ராகுல் ஆகிய இருவரும் நாடு திரும்புகின்றனர். #AUSvIND

Murugesan L | news18
Updated: January 13, 2019, 10:53 AM IST
ஹர்திக் பாண்டியா, ராகுலுக்கு பதிலாக மாற்றுவீரர்கள் அறிவிப்பு!
விஜய் சங்கர் மற்றும் சுப்மன் கில்.
Murugesan L | news18
Updated: January 13, 2019, 10:53 AM IST
தடைவிதிக்கப்பட்ட ஹர்திக் பாண்டியா, ராகுலுக்கு பதிலாக இரண்டு மாற்று வீரர்களை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது.

தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்த விவகாரத்தில், ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா மற்றும் கே.எல்.ராகுல் ஆகிய இருவருக்கும் போட்டிகளில் பங்கேற்க பிசிசிஐ தடை விதித்தது. அத்துடன், உடனடியாக நாடு திரும்புமாறும் அவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

Hardik Pandya, KL Rahul, ஹர்திக் பாண்டியா, கே.எல்.ராகுல்
‘காபி வித் கரண்’ நிகழ்ச்சியில் கே.எல்.ராகுல் மற்றும் ஹர்திக் பாண்டியா. (Twitter/HardikPandya)


இந்நிலையில், அணியில் இருந்து நீக்கப்பட்ட இரு வீரர்களுக்கு பதிலாக, தமிழகத்தைச் சேர்ந்த ஆல்ரவுண்டர் விஜய் சங்கர் மற்றும் சுப்மன் கில் ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ-யின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆல்ரவுண்டர் விஜய் சங்கர், வரும் 15-ம் தேதி நடைபெறும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டியிலேயே இந்திய அணியில் சேர்க்கப்படுவார். சுப்மன் கில், நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி-20 தொடரில் அணியில் சேர்க்கப்படுவார் என்று கூறப்பட்டுள்ளது.

Vijay Shankar, விஜய் சங்கர்
இந்திய அணியில் விஜய் சங்கர். (BCCI)


19-வயதான சுப்மன் கில், அண்மையில் நடந்த ரஞ்சிக் கோப்பையில் 10 இன்னிங்சில் விளையாடி 790 ரன்கள் குவித்தார். இதில், 2 இரட்டை சதமும், 5 அரைசதமும் அடங்கும். 2018-ல் நடந்த 19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக்கோப்பைப் போட்டியில் சுப்மன் கில் தொடர் நாயகன் விருதை வென்றார். தற்போது, அறிமுக வீரராக நியூசிலாந்து தொடரில் களமிறங்க உள்ளார்.
Loading...
Shubman Gill, சுப்மன் கில்
19 வயதுக்கு உட்பட்டோருக்கான இந்திய அணியில் சுப்மன் கில்.


தமிழக வீரர் விஜய் சங்கர் 2-வது முறையாக இந்திய அணியில் விளையாடும் வாய்ப்புப் பெற்றுள்ளார். முன்னதாக, கடந்த 2018-ல் இலங்கையில் நடந்த நிதாஹஸ் கோப்பையில் இடம் பெற்றிருந்தார். ஹர்திக் பாண்டியாவின் இடத்தை நிரப்ப ஆல்ரவுண்டர் தேவை என்பாதல், விஜய் சங்கர் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது.

Also Watch...

First published: January 13, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...