ஸ்ரீசாந்த் அபார பவுலிங், ராபின் உத்தப்பா சரவெடியில் உ.பி.யை வீழ்த்தியது கேரளா

ஸ்ரீசாந்த் (கோப்பு படம்)

சிஎஸ்கேவுக்கு ஆடவிருக்கும் ராபின் உத்தப்பா 8 பவுண்டரிகள் 4 சிக்சர்களுடன் 55 பந்துகளில் 81 ரன்கள் என்று சரவெடி இன்னிங்ஸை ஆடினார்.

  • Share this:
    பெங்களூருவில் நடைபெற்ற விஜய் ஹஜாரே டிராபி உள்நாட்டு 50 ஓவர் கிரிக்கெட் தொடரின் பிரிவு சி ஆட்டத்தில் சச்சின் பேபி தலைமை கேரளா அணி, புவனேஷ்வர் குமார் தலைமை உத்தரப் பிரதேச அணியை 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

    இதன் மூலம் கேரளா அணி தன் 2வது வெற்றியைப் பதிவு செய்துள்ளது. முதலில் பேட் செய்த உத்தரப் பிரதேச அணி 283 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது, ஸ்ரீசாந்த் 65 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். தொடர்ந்து ஆடிய கேரளா அணியில் சிஎஸ்கேவுக்கு ஆடவிருக்கும் ராபின் உத்தப்பா 8 பவுண்டரிகள் 4 சிக்சர்களுடன் 55 பந்துகளில் 81 ரன்கள் என்று சரவெடி இன்னிங்ஸை ஆட, கேப்டன் சச்சின் பேபி 76 ரன்களை எடுகக் 7 பந்துகள் மீதமுள்ள நிலையில் கேரளா 284/7 என்று வெற்றி பெற்றது.

    2013க்குப் பிறகு கேரளாவுக்காக முழு சீசனில் உள்நாட்டுத் தொடரில் பங்கேற்கிறார் ஸ்ரீசாந்த். சையத் முஷ்டாக் அலி டி20 தொடர் முழுதும் ஆடினார். தற்போது 50 ஓவர் போட்டிகள்ல் 2 ஆட்டங்களில் 7 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார் ஸ்ரீசாந்த்.

    37 வயதான ஸ்ரீசாந்த் லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் எடுக்கும் 2வது 5 விக்கெட்டுகளாகும் இது. 2006-ல் இங்கிலாந்துக்கு எதிராக 6 விக்கெட்டுகளை 55 ரன்களுக்குக் கைப்பற்றினார் ஸ்ரீசாந்த்.

    கேரளா இலக்கை விரட்டும் போது விஷ்ணு வினோத் விக்கெட்டை புவனேஷ்வர் குமார் காலி செய்தார். ஆனால் அதன் பிறகு உத்தப்பா, சஞ்சு சாம்சன் சரவெடி காட்டினர். இருவரும் சேர்ந்து 104 ரன்களைச் சேர்த்தனர். இதில் சாம்சன் 32 பந்துகளில் 29 ரன்கள் எடுத்து ரன் அவுட் ஆனார். முன்னதாக உத்தப்பாவும் அதிரடி இன்னிங்ஸ் ஆடி ஷிவம் சர்மாவிடம் வெளியேறினார்.

    ஆனால் சச்சின் பேபி, வத்சல் கோவிந்த் (30) இணைந்து ஸ்கோரை 193 ரன்களுக்குக் கொண்டு சென்றனர். அதிகம் எதிர்பார்க்கப்பட்ட வளரும் நட்சத்திரம் மொகமது அசாருதீன் 1 ரன்னில் வெளியேறினார். 270/6 என்ற நிலையில் சச்சின் பேபியும் வெளியேறினார், ஆனால் ஜலஜ் சக்சேனா (31), கைகொடுக்க, கடைசியில் நிதீஷ் 6 பந்துகளில் 1 பவுண்டரி 1 சிக்சருடன் 13 நாட் அவுட் என்று வெற்றிக்கு இட்டுச் சென்றார்.

    புவனேஷ்வர் குமார் 9.5 ஓவர்க்ள் 45 ரன்கள் 1 விக்கெட். கரண் ஷர்மா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். இதன் மூலம் கேரளாவுக்கு 4 புள்ளிகள் கிடைத்தன.
    Published by:Muthukumar
    First published: