Home /News /sports /

Vijay Hazare Trophy| கர்நாடகா அணியை ஊதித்தள்ளிய மணிமாறன், சாய் கிஷோர்: தமிழ்நாடு வெற்றி

Vijay Hazare Trophy| கர்நாடகா அணியை ஊதித்தள்ளிய மணிமாறன், சாய் கிஷோர்: தமிழ்நாடு வெற்றி

தமிழ்நாடு அணி. கோப்புப் படம்

தமிழ்நாடு அணி. கோப்புப் படம்

விஜய் ஹசாரே டிராபிக்கான ஒரு நாள் உள்நாட்டு தொடர் நடைபெற்று வருகிறது, இதில் முதல் போட்டியில் மும்பையை வீழ்த்திய தமிழ்நாடு அணி இன்று நடைபெற்ற எலைட் குரூப் பி ஆட்டத்தில் கர்நாடகா அணியை ஊதித்தள்ளி 2-வது வெற்றியைப் பதிவு செய்தனர்.

    விஜய் ஹசாரே டிராபிக்கான ஒரு நாள் உள்நாட்டு தொடர் நடைபெற்று வருகிறது, இதில் முதல் போட்டியில் மும்பையை வீழ்த்திய தமிழ்நாடு அணி இன்று நடைபெற்ற எலைட் குரூப் பி ஆட்டத்தில் கர்நாடகா அணியை ஊதித்தள்ளி 2-வது வெற்றியைப் பதிவு செய்தனர்.

    இன்று டிசம்பர் 9ம் தேதி திருவனந்தபுரத்தில் மணீஷ் பாண்டே தலைமை கர்நாட அணி டாஸ் வென்று முதலில் பேட் செய்ய முடிவெடுத்தது. அதுவே எமனானது. கர்நாடகா 36.3 ஒவர்களில் 122 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது, தொடர்ந்து ஆடிய தமிழ்நாடு அணி 28 ஓவர்களில் 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 123 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.

    கர்நாடகா அணியில் தொடக்க வீரர் ரோகன் காதம் 69 பந்துகளில் 37 ரன்கள் எடுக்க கேப்டன் மணீஷ் பாண்டே 54 பந்துகளில் 3 பவுண்டரிகளுடன் 40 ரன்கள் எடுத்தார். மற்ற வீரர்கள் யாரும் இரட்டை இலக்கத்தைக் கூட எட்டவில்லை. தமிழ்நாடு அணியில் சந்தீப் வாரியர், ரகுபதி சிலம்பரசன் தலா 1 விக்கெட் எடுக்க, இடது கை சுழற்பந்து வீச்சாளர் மணிமாறன் சித்தார்த் 9 ஒவர்கள் வீசி 23 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளைக் கைப்பற்ற, வாஷிங்டன் சுந்தர் 1 விக்கெட்டையும் சாய் கிஷோர் 7.3 ஓவர்கள் வீசி 28 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

    தொடர்ந்து தமிழ்நாடு அணி 123 ரன்கள் இலக்கை அனாயசமாக நோ-லாஸில் ஊதி விடும் என்று பார்த்தால், தமிழ்நாடு தொடக்க வீரர் சாய் சுதர்சன் (18) சுசித் பந்தில் பவுல்டு ஆகி வெளியேறினார். மற்றொரு தொடக்க வீரர் நாராயண் ஜெகதீசன் 16 ரன்களில் பாட்டீல் பந்தில் பவுல்டு ஆனார். 58/2.

    இந்த நிலையிலிருந்து பாபா இந்திரஜித், வாஷிங்டன் சுந்தர் ஜோடி சேர்ந்து 65 ரன்கள் கூட்டணி அமைத்து மேலும் விக்கெட் இழக்காமல் 123/2 என்று 28 ஓவர்களில் கர்நாடகாவின் கதையை முடித்தனர்.

    பாபா இந்திரஜித் 74 பந்துகளில் 6 பவுண்டரிகளுடன் 51 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமலும் வாஷிங்டன் சுந்தர் 33 பந்துகளில் 3 பவுண்டரிகளுடன் 31 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமலும் வெற்றிக்கு இட்டுச் சென்றனர்.

    Also Read: Ashes 1st test| ஆஷஸ் வரலாற்றில் 3-வது அதிவேக சதம் விளாசிய டிராவிஸ் ஹெட் - 3வது நாளில் இங்கிலாந்தை பார்சல் செய்யுமா ஆஸ்திரேலியா?

    இந்த வெற்றி மூலம் எலைட் குரூப் பி-யில் தமிழ்நாடு அணி 1.080 நெட் ரன் ரேட்டுடன் 2ம் இடத்தில் உள்ளது, கர்நாடகா முதலிடம், பெங்கால் 3ம் இடம், இந்த 3 அணிகளும் தலா 4 புள்ளிகள் பெற்றுள்ளன. இதே பிரிவில் உள்ள பரோடா, மும்பை, பாண்டிச்சேரி புள்ளிகள் எதையும் பெறவில்லை.
    Published by:Muthukumar
    First published:

    Tags: Vijay hazare trophy

    அடுத்த செய்தி