முகப்பு /செய்தி /விளையாட்டு / பாண்டிச்சேரியிடம் தமிழ்நாடு அதிர்ச்சித் தோல்வி- விஜய்ஹசாரே டிராபி ரவுண்ட்-அப்

பாண்டிச்சேரியிடம் தமிழ்நாடு அதிர்ச்சித் தோல்வி- விஜய்ஹசாரே டிராபி ரவுண்ட்-அப்

பாண்டிச்சேரியிடம் தமிழ்நாடு அதிர்ச்சித் தோல்வி.

பாண்டிச்சேரியிடம் தமிழ்நாடு அதிர்ச்சித் தோல்வி.

நேற்று நடைபெற்ற விஜய் ஹசாரே கோப்பைக்கான உள்நாட்டு ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் பாண்டிச்சேரி அணி தமிழ்நாடு அணியை 1 ரன்னில் த்ரில் வெற்றி பெற்றது. ஒரு ரன்னில் த்ரில் வெற்றி பெற்றது பாண்டிச்சேரி.

  • Last Updated :

நேற்று நடைபெற்ற விஜய் ஹசாரே கோப்பைக்கான உள்நாட்டு ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் பாண்டிச்சேரி அணி தமிழ்நாடு அணியை 1 ரன்னில் த்ரில் வெற்றி பெற்றது. ஒரு ரன்னில் த்ரில் வெற்றி பெற்றது பாண்டிச்சேரி.

44 ஓவர்களில் 2016 ரன்கள் என்று விஜேடி முறையில் மாற்றியமைக்கப்பட்ட இலக்கை விரட்டிய தமிழக அணி 204/9 என்று முடிந்து ஒரு ரன்னில் அதிர்ச்சித் தோல்வி கண்டது. தமிழ்நாடு அணியில் கேப்டன் என்.ஜெகதீசன் 64 ரன்களையும் தினேஷ் கார்த்திக் 65 ரன்களையும் எடுத்தனர்.

மற்ற போட்டிகளில் கடந்த சாம்பியன் ஆன மும்பை அணி பெங்கால் அணியிடம் 47 ரன்களில் தோல்வி தழுவியது. இதனையடுத்து மும்பை வெளியேறியது. 4 போட்டிகளில் மும்பை 1 வெற்றிய மட்டுமே பெற்று அடுத்த சுற்று வாய்ப்பை இழந்தது.

மற்றொரு போட்டியில் கர்நாடகா அணி பரோடாவை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது. இதன் மூலம் 4 போட்டிகளில் 3-ல் வென்று வலுவாக உள்ளது. பெங்கால் - மும்பை போட்டியில் பெங்கால் அணி 50 ஒவர்களில் 318/7 என்று ரன் குவித்தது. அனுஷ்துப் மஜும்தார் 110 ரன்களையும் ஷாபாஸ் அகமட் 106 ரன்களையும் குவித்தனர். தொடர்ந்து ஆடிய மும்பை அணிக்கு விஜேடி முறையில் மாற்று இலக்கு நிர்ணயிக்கப்பட மும்பை அணி 41 ஓவர்களில் 223/8 என்று முடிந்தது. தோல்வியடைந்து வெளியேறியது. சூரியகுமார் யாதவ் அதிரடி 49 ரன்களை எடுத்தார்.

கர்நாடகா/ பரோடா போட்டியில் பரோடா அணியை கர்நாடகா அணி 176 ரன்களுக்குச் சுருட்டியது. இலக்கை கர்நாடகா அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் எடுத்து அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றி மூலம் கர்நாடகா அணி 12 புள்ளிகளுடன் தமிழ்நாடு அணியுடன் டாப் இடத்தில் இணைந்தது.

பாண்டிச்சேரியை எதிர்த்து தமிழ்நாடு அணி ஆடிய போது, 49 ஓவர்களில் பாண்டிச்சேரி 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 225 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் ஃபாபிட் அகமட் 87 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாகத் திகழ்ந்தார். பவுலிங்கில் வாஷிங்டன் சுந்தர் 5/48 என்று அபாரமாக வீசினார். மழை காரணமாக மாற்றி அமைக்கப்பட்ட இலக்கில் தமிழ் நாடு அணிக்கு 44 ஓவர்களில் வெற்றி இலக்கு 206 ரன்கள். ஆனால் 204/9 என்று தமிழ்நாடு அதிர்ச்சித் தோல்வி கண்டது.

top videos

    பாண்டிச்சேரி அணியில் 87 நாட் அவுட் என்று விளாசிய ஆல்ரவுண்டர் பாபிட் அகமெட் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

    First published:

    Tags: Vijay hazare trophy