விஜய் ஹசாரே ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடர் காலிறுதிக்கு தமிழ்நாடு அணி முன்னேறியது. பரோடா அணிக்கு எதிராக 73 ரன்களில் சுருண்டு அதிர்ச்சித் தோல்வி அடைந்தாலும் நெட் ரன் ரேட் படி முதலிடம் பிடித்த தமிழ்நாடு காலிறுதிக்குத் தகுதி பெற்றது.
இதே குரூப் பியில் கர்நாடகம், பெங்கால், பாண்டிச்சேரி அணிகளும் 12 புள்ளிகள் பெற்றிருந்தன. திருவனந்தபுரத்தில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் பரோடா அணி முதலில் பேட் செய்து 39 ஓவர்களில் 114 ரன்களுக்குச் சுருண்டது. பின்னர் ஆடிய தமிழக அணி 20.2 ஓவர்களில் 73 ரன்களுக்கு மண்ணைக்கவ்வியது. ஆனாலும் நெட் ரன் ரேட் 1.052 என்று இருந்ததால் தமிழ்நாடு அணி காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறியது.
இதனிடையே ஹிமாச்சலம், சவுராஷ்டிரா, கேரளா அணிகளும் காலிறுதிக்குத் தகுதி பெற்றுள்ளன. விதர்பா-திரிபுரா, கர்நாடகா-ராஜஸ்தான், உ.பி.-ம.பி. அணிகள் மோதும் போட்டிகளில் வெல்லும் அணிகளும் காலிறுதிக்குத் தகுதி பெறும்.
குரூப் பி-யில் இடம்பெற்ற தமிழக அணி முதல் 3 ஆட்டங்களில் மும்பை, கர்நாடகம், வங்காளம் போன்ற பெரிய அணிகளை வீழ்த்தியது, ஆனால் பாண்டிச்சேரியிடம் 1 ரன்னிலும் பரோடா அணியிட படுதோல்வியையும் சந்தித்தது.
Also Read: ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி: 2-0-வுக்குப் பிறகு வெற்றியை நழுவ விட்ட இந்தியா
முதலில் பேட் செய்த பரோடா அணி தமிழ்நாடு அணியின் சிறப்பான பந்து வீச்சினால் 39 ஓவர்களில் 114 ரன்களுக்குச் சுருண்டது. குருணால் பாண்டியா அதிகபட்சமாக 38 ரன்கள் விளாசினார். தமிழ்நாடு அணியில் சித்தார்த், வாரியர், வாஷிங்டன் சுந்தர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
Also Read: டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ரவீந்திர ஜடேஜா ஓய்வு?- ரசிகர்கள் அதிர்ச்சி
தொடர்ந்து ஆடிய தமிழ்நாடு அணி 11 ஓவர்களில் 33/5 என்று தட்டுத்தடுமாறியது, பிறகு 20.2 ஓவர்களில் 73 ரன்களுக்குச் சுருண்டது. தமிழக அணியில் சஞ்சய் யாதவ் அதிகபட்சமாக 19 ரன்களை எடுத்தார். பரோடாவின் பார்கவ் பட் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். 5 ஆட்டங்களில் 3 வெற்றிகளுடன் 12 புள்ளிகள் பெற்று நெட் ரன் ரேட்டில் காலிறுதிக்கு தமிழ்நாடு முன்னேறியுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Vijay hazare trophy