ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

நான் காயமடையவில்லை எனில் வெற்றி பெறச் செய்திருப்பேன்: சுவராக நின்ற விஹாரி திட்டவட்டம்

நான் காயமடையவில்லை எனில் வெற்றி பெறச் செய்திருப்பேன்: சுவராக நின்ற விஹாரி திட்டவட்டம்

சிட்னி நாயகர்கள் விஹாரி, அஸ்வின்

சிட்னி நாயகர்கள் விஹாரி, அஸ்வின்

எனக்கு முதுகு காயம், விஹாரிக்கு தொடைப்பகுதி தசைப்பிடிப்பு, இதில் எதையும் நாங்கள் கொண்டாட விரும்பவில்லை. தோற்க விரும்பவில்லை, அதனால் மோசமான ஷாட் ஆடிவிடக்கூடாது என்பதில்தான் முழு கவனமும் இருந்தது.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :

  அஸ்வினும், விஹாரியும் சேர்ந்து நேற்று சிட்னியில் டிரா செய்தது பற்றியே உலகம் முழுதும் பேச்சாக இருந்து வருகிறது. தோல்வியைத் தவிர்த்தது என்பதை விட ஆஸி. வெற்றிக் கனவை தகர்த்தது என்பதில்தான் ரசிகர்கள் பெரிய மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

  1979 ஓவல் டெஸ்ட் போட்டியில் 438 ரன்கள் வெற்றி இலக்கை எதிர்த்து இந்தியா 429/8 என்று டிரா செய்தது. அதில் கவாஸ்கர் 221 ரன்களை விளாசினார், சேத்தன் சவுகான் 89 ரன்களை எடுத்தார், இருவரும் சேர்ந்து முதல் விக்கெட்டுக்காக 213 ரன்களைச் சேர்த்தனர். 150 ஓவர்கள் ஆடியது இந்திய அணி. சிட்னியில் 2வது இன்னிங்சில் தற்போது 131 ஓவர்கள் ஆடியது.

  இரண்டுமே மாரத்தான் டிராதான்.

  இந்நிலையில் விஹாரி தான் காயமடையாவிட்டால் நிச்சயம் வெற்றி பெற்றிருப்போம் என்றார்.

  இவரும் அஸ்வினும் பிசிசிஐ.டிவிக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:

  அஸ்வின் கூறும்போது, “எனக்கு முதுகு காயம், விஹாரிக்கு தொடைப்பகுதி தசைப்பிடிப்பு, இதில் எதையும் நாங்கள் கொண்டாட விரும்பவில்லை. தோற்க விரும்பவில்லை, அதனால் மோசமான ஷாட் ஆடிவிடக்கூடாது என்பதில்தான் முழு கவனமும் இருந்தது.

  கடைசி 4-5 ஓவர்களில் நெருங்கி விட்டோம் என்று நினைத்தோம். கொஞ்சம் சறுக்கத் தொடங்கினோம், அதனால் ஸ்ட்ரைக்கை ரொடேட் செய்ய விரும்பினோம்.

  முடிவில் நாங்கள் கொண்டாடவில்லை ஏனெனில் இதிலிருந்து என்ன பெறுவது என்று எங்களுக்குப் புரியவில்லை. ஒரு குறிப்பிட்ட பவுலரை தடுத்தாட வேண்டும் என்பதில் முழு கவனத்துடன் இருந்தோம்” என்றார் அஸ்வின்.

  மேலும் அவர் 2012-ல் தென் ஆப்பிரிக்காவின் ஃபா டுபிளெசிஸ் அடிலெய்ட் டெஸ்ட்டை ஒருநாள் பூரா ஆடி ட்ரா செய்ததை தனக்கு உத்வேகமாகக் கொண்டதாகத் தெரிவித்தார். தென் ஆப்பிரிக்காவுக்கு இலக்கு 430 ரன்கள், டுபிளெசிஸ் 376 பந்துகள் ஆடி 110 ரன்கள் எடுத்து டிரா செய்தார்.

  ”அடிலெய்டில் டுபிளெசிஸ் பேட் செய்ததை நினைத்துக் கொண்டேன்.” என்றார் அஸ்வின்.

  ஹனுமா விஹாரி, “டிரா செய்தது விலைமதிப்பில்லா முடிவுதான், ஆனால் நான் மட்டும் காயமடைந்திருக்கா விட்டால், புஜாரா இன்னும் கொஞ்ச நேரம் நின்றிருந்தால் நிச்சயம் வெற்றி பெற்றிருப்போம். விலைமதிப்பில்லா வெற்றியை பெற்றிருப்போம்.

  நான் சோர்வடையும் போதெல்லாம் அஸ்வின் எதிர்முனையிலிருந்து உத்வேகமூட்டினார். 5ம் நாள் ஆட்டத்தில் ஆடுவது என்பது கனவுதான். திருப்திகரமாக அதைச் செய்து முடித்திருப்பது எனக்குள் அது மெதுவே இப்போதுதான் ஊடுருவத் தொடங்கியுள்ளது” என்றார் விஹாரி.

  Published by:Muthukumar
  First published:

  Tags: India vs Australia, R Ashwin, Sydney