தோனியின் பயிற்சியைப் பார்க்க வந்த 87-வயது மூதாட்டி!

Dhoni Spends Quality Time With an 87-Year-Old Fan | நீண்ட நாட்களாக ஓய்வில் இருந்த மகேந்திர சிங் தோனி, சிட்னி மைதானத்தில் வலைப்பயிற்சி மேற்கொண்டனர்.

Web Desk | news18
Updated: January 10, 2019, 5:04 PM IST
தோனியின் பயிற்சியைப் பார்க்க வந்த 87-வயது மூதாட்டி!
தோனியைப் பார்க்க வந்த 87 வயது மூதாட்டி. (Courtesy: Xtratime)
Web Desk | news18
Updated: January 10, 2019, 5:04 PM IST
சிட்னியில் மகேந்திர சிங் தோனி பயிற்சி செய்வதை 87 வயது ஆஸ்திரேலிய மூதாட்டி ஒருவர் பார்க்க வந்த சுவராஸ்யமான நிகழ்வு நடந்துள்ளது.

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி, 3 விதமான கிரிக்கெட் தொடர்களில் விளையாடி வருகிறது. முதலில் நடந்த டி-20 தொடர் 1-1 என சமனில் முடிந்தது.

அண்மையில், நடந்து முடிந்த 4 போட்டிகள் டெஸ்ட் தொடரை இந்திய அணி 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி வரலாற்றுச் சாதனை படைத்தது. இந்திய டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில், ஆஸ்திரேலிய மண்ணில் முதல் முறையாக டெஸ்ட் தொடரை வென்று விராட் கோலி தலைமையிலான இந்திய அணி 71 ஆண்டுகால தாகத்தை தீர்த்தது.

Indian Cricket Team, இந்திய கிரிக்கெட் அணி
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை முதல் முறையாக வென்று இந்திய அணி வரலாறு படைத்தது. (Cricket Australia)


இதனை அடுத்து, இரு அணிகள் இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நாளை மறுநாள் (ஜன.12) தொடங்கி 18-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் பங்கேற்பதற்காக, முன்னாள் கேப்டன் மற்றும் விக்கெட் கீப்பர் தோனி, ரோகித் சர்மா, கேதர் ஜாதவ், கலீல் அகமது ஆகியோர் நேற்று (ஜன.8) சிட்னிக்கு வந்து சேர்ந்தனர்.இந்நிலையில், நீண்ட நாட்களாக ஓய்வில் இருந்த மகேந்திர சிங் தோனி, சிட்னி மைதானத்தில் வலைப்பயிற்சி மேற்கொண்டனர். நீண்ட இடைவெளிக்கு பின் அணியில் இடம்பிடித்த ஷிகர் தவான், அம்பதி ராயுடு ஆகியோரும் பயிற்சியில் ஈடுபட்டனர்.

Dhoni Practice, தோனி, வலைப்பயிற்சி
வலைப் பயிற்சியில் தோனி. (BCCI)


வலைப்பயிற்சியின்போது, தோனியைப் பார்ப்பதற்காக 87 வயது ஆஸ்திரேலிய மூதாட்டி எடித் நார்மன் வந்துள்ளார். தோனி பயிற்சியை முடித்ததும் அவரிடம் மூதாட்டி தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார். பின்னர், மூதாட்டியின் அருகில் அமர்ந்து தோனி புகைப்படம் எடுத்துக்கொண்டார்.

MS Dhoni, தோனி
87 வயது ஆஸ்திரேலிய ரசிகை உடன் தோனி. (Courtesy: Xtratime)


பயிற்சி முடிந்ததும் தோனியும், மூதாட்டியும் ஒன்றாக அமர்ந்து சிரித்து பேசும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.தோனி எங்களுக்கு வழிகாட்டும் ஒளி...! ரோகித் சர்மா நெகிழ்ச்சி.

Also Watch...

First published: January 10, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...