Video: சிட்னியில் இந்திய அணி வீரர்கள் தீவிர வலைப்பயிற்சி

#RohitSharma, #ViratKohli take the nets | இரு அணிகள் மோதும் முதல் ஒருநாள் போட்டி நாளை மறுநாள் (ஜன.12) சிட்னியில் நடைபெற உள்ளது. #AUSvIND

news18
Updated: January 10, 2019, 8:37 PM IST
Video: சிட்னியில் இந்திய அணி வீரர்கள் தீவிர வலைப்பயிற்சி
வலைப்பயிற்சியில் இந்திய வீரர்கள். (Twitter/BCCI)
news18
Updated: January 10, 2019, 8:37 PM IST
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் தொடருக்காக இந்திய அணி வீரர்கள் தீவிர வலைப்பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி, 3 விதமான கிரிக்கெட் தொடர்களில் விளையாடி வருகிறது. முதலில் நடந்த டி-20 தொடர் 1-1 என சமனில் முடிந்தது.

அண்மையில், நடந்து முடிந்த 4 போட்டிகள் டெஸ்ட் தொடரை இந்திய அணி 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி வரலாற்றுச் சாதனை படைத்தது. இந்திய டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில், ஆஸ்திரேலிய மண்ணில் முதல் முறையாக டெஸ்ட் தொடரை வென்று விராட் கோலி தலைமையிலான இந்திய அணி 71 ஆண்டுகால தாகத்தை தீர்த்தது.

Indian cricket team, இந்திய கிரிக்கெட் அணி
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கோப்பையை வென்ற உற்சாகத்தில் இந்திய டெஸ்ட் அணி வீரர்கள். (Image: AP)


இதனை அடுத்து, இரு அணிகள் இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நாளை மறுநாள் (ஜன.12) தொடங்கி 18-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் பங்கேற்பதற்காக, இந்திய அணி வீரர்கள் நேற்று முன்தினம் (ஜன.8) சிட்னிக்கு வந்து சேர்ந்தனர்.



இந்நிலையில், பல மாதங்களாக ஓய்வில் இருந்த மகேந்திர சிங் தோனி, விராட் கோலி ஆகியோர் சிட்னி மைதானத்தில் வலைப்பயிற்சி மேற்கொண்டனர். மைதானம் ஈரப்பதமாக இருப்பதால், உள்ளரங்கத்தில் வீரர்கள் பயிற்சி செய்தனர்.



நீண்ட இடைவெளிக்குப்பின், அணிக்குத் திரும்பிய தொடக்க வீரர் ஷிகர் தவான் பயிற்சியைத் தொடங்கினார். அதேபோல், ‘ஹிட்மேன்’ ரோகித் சர்மாவும் பயிற்சி செய்தார். இந்திய வீரர்கள் பயிற்சி செய்யும் வீடியோ வெளியாகியுள்ளது.



இரு அணிகள் மோதும் முதல் ஒருநாள் போட்டி நாளை மறுநாள் (ஜன.12) சிட்னியில் நடைபெற உள்ளது.

தோனியின் பயிற்சியைப் பார்க்க வந்த 87-வயது மூதாட்டி!

Also Watch...

First published: January 10, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...