முகப்பு /செய்தி /விளையாட்டு / VIDEO: பேட்டை தோளில் போட்டு தலாட்டிய ரோகித்... ஏன் தெரியுமா?

VIDEO: பேட்டை தோளில் போட்டு தலாட்டிய ரோகித்... ஏன் தெரியுமா?

 பேட்டை தோளில் போட்டு தலாட்டிய ரோகித் சர்மா.

பேட்டை தோளில் போட்டு தலாட்டிய ரோகித் சர்மா.

#RohitSharma match-winning fifty with unique celebration | ரோகித் சர்மா 48 பந்துகளில் 55 ரன்கள் விளாசினார். #MIvKKR

  • News18
  • 1-MIN READ
  • Last Updated :

கொல்கத்தாவுக்கு எதிரான போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோகித் சர்மா, அரைசதம் அடித்ததும் தனது பேட்டை தோளில் போட்டு தலாட்டினார்.

மும்பை வான்கடே மைதானத்தில் நடந்த நேற்றைய போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் பலபரீட்சை நடத்தின. முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 133 ரன்கள் எடுத்தது.

அடுத்துக் களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி, 16.1 ஓவர்களில் ஒரு விக்கெட்டை மட்டும் இழந்து 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அதிகபட்சமாக, ரோகித் சர்மா 48 பந்துகளில் 55 ரன்கள் விளாசினார்.

ரோகித் சர்மா, அரைசதம் அடித்ததும் தனது பேட்டை தோளில் போட்டு தலாட்டுவதுபோல் காட்டினார். அரைசதத்தை தனது செல்ல மகள் சமைராவுக்கு சமர்பிக்கும் வகையில் பேட்டை தோளில் போட்டு தலாட்டியுள்ளார்.
 
View this post on Instagram
 

This one was for the little one 🤗 #MIvKKR


A post shared by IPL (@iplt20) onதற்போது, இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.

சி.எஸ்.கே அணியில் இருந்து முக்கிய வீரர் விலகல்? சென்னை ரசிகர்கள் அதிர்ச்சி!

ஐபிஎல்-ல வேலை முடிஞ்சது... அதனால இப்ப சினிமா... - ஆண்ட்ரு ரசல் அதிரடி பிளான்

Video: ஜூனியர் இம்ரான் தாஹிர் ரெடி!


தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.விளையாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  விளையாட்டு செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.


First published:

Tags: Cricket, IPL 2019, Rohit sharma