மெல்போர்ன் டெஸ்டில் 3-ம் நாளில் தன்னைக் கிண்டல் செய்த டிம் பெய்னை, இந்திய விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் பயங்கரமாக கிண்டல் செய்த வீடியோ வைரலாகி வருகிறது.
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி மெல்போர்ன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. முதல் இன்னிங்சில் இந்திய அணி 443 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 151 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
2-வது இன்னிங்சில் இந்தியாவின் ரிஷப் பண்ட் பேட்டிங் செய்தபோது, ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் மற்றும் விக்கெட் கீப்பர் டிம் பெய்ன், “தோனி வந்ததால் ஒருநாள் அணியில் இருந்து நீக்கிவிட்டார்கள். ஆஸ்திரேலியாவில் நடக்கும் பிக்பாஷ் லீக் தொடரில் விளையாடும் ஹரிஹேன்ஸ் அணியில் சேர்த்துவிடவா?” என கூறினார்.
Tim Paine doing some recruiting for the @HurricanesBBL out in the middle of the 'G... 😂 #AUSvIND pic.twitter.com/6btRZA3KI7
— cricket.com.au (@cricketcomau) December 28, 2018
அதேபோல, ரோகித் சர்மா பேட்டிங் செய்துகொண்டிருந்தபோது விக்கெட் கீப்பர் டிம் பெய்ன், ஸ்லிப்பில் நின்றுகொண்டிருந்த பிஞ்சிடம், “ரோகித் சிக்ஸ் அடித்தால் நான் ஐ.பி.எல் தொடரில் விளையாடும் மும்பை அணியில் சேர்ந்து விடுகிறேன்” என்றார். ஆனால், ரோகித் சர்மா அதை கண்டுகொள்ளவில்லை.
இந்நிலையில், 4-ம் நாளான இன்று (29.12.18) டிம் பெய்ன் பேட்டிங் செய்தபோது, விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட், “மயங்க் அகர்வால்... இன்று ஒரு சிறப்பு விருந்தினர் வந்திருக்கிறார். தற்காலிக கேப்டன் கேட்டிருக்கிறீர்களா?
எப்போதுமே தற்காலிக கேப்டன் என்ற வார்த்தையை நீங்கள் கேட்டிருக்கிறீர்களா? அவரை வெளியே அனுப்புவதற்கு ஏதும் தேவையில்லை. அவரால் பேசமட்டும்தான் முடியும்.” என்று பயங்கரமாக கிண்டல் அடித்தார்.
"Have you heard the word temporary captain ever?" 😂😂😂@RishabPant777 resumes his hostilities with Tim Paine https://t.co/faCh1ocJgj #AUSvIND pic.twitter.com/yBKWZvjQbg
— Telegraph Sport (@telegraph_sport) December 29, 2018
இனிமேல், இந்திய வீரர்களிடம் வம்புக்கு இழுப்பதில் ஆஸ்திரேலிய வீரர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருப்பார்கள் எனத் தெரிகிறது.
Also Watch...
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.