மான்கட் முறையில் விக்கெட் எடுக்க முயற்சித்த அஸ்வினை தவான் கலாய்க்கும் வீடியோ ஒன்று இணையத்தை கலக்கி வருகிறது.
டெல்லியில் நேற்றிரவு நடந்த 37-வது லீக் போட்டியில் டெல்லி-பஞ்சாப் அணிகள் மோதின. டாஸ் வென்ற டெல்லி அணி பந்துவீச்சை தேர்வு செய்ய, பஞ்சாப் அணியின் துவக்க வீரர்கள் விறுவிறுவென பெவிலியனை நோக்கி நடையை கட்டினர். அந்த அணியில் கெயில் மட்டும் வழக்கம்போல் சிக்சர்கள், பவுண்டரிகள் என ருத்ரதாண்டவம் ஆடினார்.37 பந்துகளில் அவர் 69 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.
இறுதியில் பஞ்சாப் அணி 7 விக்கெட்டுகளை இழந்து 163 ரன்கள் சேர்த்தது. டெல்லி வீரர் லாமிச்சேன் அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளை சாய்த்தார்.
164 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு களமிறங்கியது டெல்லி அணி. ஸ்ரேயாஸ் அய்யர்-ஷிகர் தவான் ஜோடியின் அசத்தல் ஆட்டத்தால் 19 புள்ளி 4 ஓவர்களில் எளிமையாக 166 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி அணி வெற்றி பெற்றது.
ஆட்டத்தின் 12.2-வது ஓவரில் ஷிகர் தவானை மான்கட் முறையில் ஆவுட்டாக்க நினைத்தார் அஸ்வின். ஆனால் சுதாரித்துகொண்ட தவான் மீண்டும் கிரீஸ் உள்ளே வந்தார். அடுத்த பந்தை அஸ்வின் வீசவந்த போது கிரீஸை விட்டு வெளியே போவது போல் அஸ்வினை கிண்டல் செய்தார் ஷிகர் தவான். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.
This just happened between #Ashwin and #Dhawan during #vivoipl #kxip #delhicapitals #ipl #cricket @IPL #DCvKXIP#IPL2019 @ashwinravi99@SDhawan25 @josbuttlerpic.twitter.com/3qkln6BypK
— DHANANJAY BHANGALE (@bhangale) April 20, 2019
எனினும் அடுத்த ஓவரிலேயே ஷிகர் தவான் தனது விக்கெட்டை பறிகொடுத்தார். வில்ஜோன் வீசிய பந்தில் அஸ்வினிடம் கேட்ச் கொடுத்து 56 ரன்களுக்கு ஆட்டமிழந்தார் ஷிகர் தவான்
Also watch
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: IPL 2019, R Ashwin, Shikhar dhawan