இந்திய ரசிகர்களை கண்கலங்க வைத்த 'தோனியின் கண்ணீர்'! வைரலாகும் வீடியோ

Vijay R | news18
Updated: July 11, 2019, 9:49 PM IST
இந்திய ரசிகர்களை கண்கலங்க வைத்த 'தோனியின் கண்ணீர்'! வைரலாகும் வீடியோ
மகேந்திர சிங் தோனி
Vijay R | news18
Updated: July 11, 2019, 9:49 PM IST
இந்திய ரசிகர்களின் ஒட்டுமொத்த உலகக் கோப்பை கனவும் நேற்றைய போட்டி கலைத்துவிட்டது. லீக் போட்டிகளில் ராஜநடை போட்டு வந்த இந்திய அணி அரையிறுதி போட்டியில் நியூசிலாந்து அணியிடம் சரணடைந்தது.

நடப்பு உலகக் கோப்பை தொடரில் மான்செஸ்டர் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் முதலில் பேட்டிங் செய்த அணியே வெற்றி பெற்று வந்தது. அந்த வரலாற்றை இந்திய அணி மாற்றி அமைக்கும் என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த நிலையில் ஆரம்பமே ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது.

தொடக்க வீரர்கள் 3 பேரும் 1 ரன்னில் அவுட்டாகி வெளியேற மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட்டாகியதால் இந்திய அணி தடுமாறியது. சரிவிலிருந்த இந்திய அணியை தோனி - ஜடேஜா ஜோடி மீட்டனர். ஆட்டம் இந்தியாவின் கைக்கு வர, தோனி இருக்கும் தைரியத்தில் ஜடேஜா நம்பிக்கையுடன் அதிரடியாக விளையாடினார்.பரபரப்பான போட்டியின் இறுதியில் ஜடேஜா அவுட்டாக தோனி அணிக்கு மிகப்பெரிய நம்பிக்கையாக இருந்தார். ஆனால் எதிர்பாராதவிதமாக தோனி ரன்அவுட்டானதை யாராலும் ஏற்றுக் கொள்ளமுடியவில்லை. இந்திய அணியின் முழு சுமையையும் தோளில் சுமந்த தோனி அவுட்டானதை எண்ணி கண்கலங்கினார்.தோனி கண்கலங்கும்இந்த வீடியோ தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அவரது ரசிகர்கள் பலர் அவருக்கு ஆதரவாக கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.

Also Read: பெண்ணிடம் தவறாக நடக்க முயன்ற பிரபல கிரிக்கெட் வீரருக்கு ஓராண்டு தடை!


Also Read : நடுவரின் தவறால் தோனி ரன் அவுட்? சர்ச்சைக்குள்ளான நியூசிலாந்து அணியின் ஃபீல்டிங்

 
First published: July 11, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...