Video: காலில் விழுந்த ரசிகர்... தேசியக் கொடியை தாங்கிப்பிடித்த தோனி..!

ரசிகர் ஒருவர் தோனியின் காலில் விழும் நிகழ்வு இத்துடன் 14-வது முறை நடந்துள்ளது.

Video: காலில் விழுந்த ரசிகர்... தேசியக் கொடியை தாங்கிப்பிடித்த தோனி..!
ரசிகர் ஒருவர் தோனியின் காலில் விழும் நிகழ்வு இத்துடன் 14-வது முறை நடந்துள்ளது.
  • News18
  • Last Updated: February 11, 2019, 2:23 PM IST
  • Share this:
நியூசிலாந்துக்கு எதிரான கடைசி டி-20 போட்டியின்போது தனது காலில் ரசிகர் ஒருவர் விழுந்தபோது, அவரது கையிலிருந்த தேசியக் கொடி தரையில் படமால் தோனி பார்த்துக்கொண்ட வீடியோ வைரலாகி வருகிறது.

இந்தியா - நியூசிலாந்து அணிகள் இடையிலான கடைசி போட்டி நேற்று (பிப்.10) நடைபெற்றது. இந்தப் போட்டியில் வெறும் 4 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி போராடி தோல்வி அடைந்ததால், 3 போட்டிகள் கொண்ட டி-20 தொடரை 1-2 என்ற கணக்கில் இழந்தது.

Indian Team, இந்திய அணி
இந்திய அணி தோல்வி. (BCCI)



இந்த போட்டியில், இந்திய அணி பீல்டிங்கின்போது, பலத்த பாதுகாப்புகளை மீறி கிரிக்கெட் ரசிகர் ஒருவர் மைதானத்திற்குள் நுழைந்தார். வீரர்களை நோக்கி வேகமாக ஓடிச் சென்ற அவர், அங்கு விக்கெட் கீப்பிங் செய்துகொண்டிருந்த தோனியின் காலில் விழுந்தார்.

Dhoni Stumping, தோனி ஸ்டம்பிங்
நியூசிலாந்து வீரர் டிம் செய்பெர்டை மின்னல் வேகத்தில் ஸ்டம்பிங் செய்த தோனி. (BCCI)


ரசிகர் காலில் விழுந்தபோது, அவரது கையிலிருந்த தேசியக் கொடி தரையில் படச்சென்றது. உடனே, தோனி தேசியக் கொடியை எடுத்து தனது கையில் வைத்துக்கொண்டார். தேசியக் கொடிக்கு தோனி மதிப்பளித்ததைக் கண்ட இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் அவரின் நாட்டுப்பற்றைப் புகழ்ந்து வருகின்றனர்.




ரசிகர் ஒருவர் தோனியின் காலில் விழும் நிகழ்வு இத்துடன் 14-வது முறை நடந்துள்ளது. தேசியக் கொடிக்கு தோனி மதிப்பளித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.

நீங்க பெரிய தோனியா? சிங்கிள் ஓட மறுத்த தினேஷ் கார்த்திக்கை வறுத்தெடுத்த நெட்டிசன்கள்!

Also Watch...

First published: February 11, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading