Video: பென் கட்டிங் முகத்தை பஞ்சராக்கிய மார்கஸ் ஹேரிஸ்!

#BenCutting Suffers While Attempting Catch | பென் கட்டிங்கை பந்து தாக்கிய வீடியோ வைரலாகி வருகிறது. #BBL #BigBashLeague

Web Desk | news18
Updated: January 10, 2019, 8:45 PM IST
Video: பென் கட்டிங் முகத்தை பஞ்சராக்கிய மார்கஸ் ஹேரிஸ்!
பீல்டிங் செய்தபோது பென் கட்டிங். (BBL)
Web Desk | news18
Updated: January 10, 2019, 8:45 PM IST
பிக் பேஷ் லீக் டி-20 போட்டியில் கேட்ச் பிடிக்க முயற்சித்த பென் கட்டிங்கின் முகத்தை பந்து பலமாக தாக்கியதில் ரத்தம் கொப்பளித்துக் கொண்டு வெளியே வந்தது.

ஆடவருக்கான ஐ.பி.எல் டி-20 போட்டியைப் போல், பிக் பாஷ் லீக் என்ற பெயரில் ஆஸ்திரேலியாவில் நடத்தப்பட்டு வருகிறது. பிரிஸ்பேனில் நடந்த போட்டியில் மெல்போர்ன் ரெனெகேட்ஸ் அணியும், பிரிஸ்பேன் ஹீட் அணியும் பலப்பரீட்சை நடத்தின.

முதலில் பேட்டிங் செய்த பிரிஸ்பேன் அணி, மெக்கல்லத்தின் அதிரடி அரைசதத்தால் 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 144 ரன்கள் எடுத்தது. 145 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மெல்போர்ன் அணி, 15.4 ஓவரில் 2 விக்கெட் இழந்து வெற்றி இலக்கை எட்டியது. விக்கெட் கீப்பர் சாம் ஹார்பர் 56 ரன்கள் அடித்து வெற்றிக்கு உதவினார்.



மெல்போர்ன் பேட்டிங்கின்போது முதல் ஓவரின் 4-வது பந்தை மார்கஸ் ஹேரிஸ் தூக்கி அடித்தார். இந்த கேட்சை பென் கட்டிங் பிடிக்க முயற்சித்தார். ஆனால், அவர் பந்தை சரியாகக் கணிக்காததால், நடு நெற்றில் பலமாக தாக்கியது. பந்து தாக்கிய சில விநாடிகளில் முகத்தில் ரத்தம் கொப்பளித்தது.

Ben Cutting, பென் கட்டிங்
பென் கட்டிங் முகத்தை தாக்கிய பந்து. (BBL)






மருத்துவக்குழுவை உடனே அழைத்து பென் கட்டிங்கிற்கு முதலுதவி செய்யப்பட்டது. போட்டி முடிந்த பிறகு, அவர் நலமுடன் இருப்பதாக பிரிஸ்பேன் அணி தனது ட்விட்டர் பக்கத்தில் புகைப்படத்தை வெளியிட்டது. அவரை பந்து தாக்கிய வீடியோ வைரலாகி வருகிறது.



தோனியின் பயிற்சியைப் பார்க்க வந்த 87-வயது மூதாட்டி!

Also Watch...

First published: January 10, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...