ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

தென் ஆப்ரிக்காவில் நடைபெறும் கிரிக்கெட் போட்டிகளை ஒளிபரப்பும் உரிமையை பெற்றது Viacom18

தென் ஆப்ரிக்காவில் நடைபெறும் கிரிக்கெட் போட்டிகளை ஒளிபரப்பும் உரிமையை பெற்றது Viacom18

வியாகாம் 18

வியாகாம் 18

2024 முதல் 2031 ம் ஆண்டு வரை தென் ஆப்ரிக்காவில் நடைபெறும் சர்வதேச ஆண்கள் கிரிக்கெட் மற்றும் சர்வதேச மகளிர் கிரிக்கெட் போட்டிகளை எக்ஸ்க்ளுசிவ்வாக டிஜிட்டல் தளம் மற்றும் தொலைக்காட்சியில் உரிமையை Viacom18 பெற்றுள்ளது.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • inter, Indiasouth africasouth africasouth africa

  தென் ஆப்ரிக்காவில் நடைபெறும் கிரிக்கெட் போட்டிகளை டிஜிட்டல் தளம் மற்றும் தொலைக்காட்சியில்  ஒளிபரப்பும் உரிமையை வியாகாம் 18 நிறுவனம் பெற்றுள்ளது.

  இந்தியாவில் நடைபெறும் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் போன்று தென் ஆப்ரிக்காவில் தென் ஆப்ரிக்க பிரீமியர் டி20 லீக் போட்டிகள் நடத்தப்படவுள்ளன. தென் ஆப்ரிக்க பிரீமியர் டி20 லீக் போட்டிகளை இந்தியாவில் 10 ஆண்டுகளுக்கு ஒளிபரப்பும் உரிமையை Viacom 18 Sports நிறுவனம் அண்மையில் பெற்றது. இந்நிலையில், தென் ஆப்ரிக்க கிரிக்கெட் வாரியத்துடன் 7 ஆண்டுகள் ஒப்பந்தத்தை Viacom 18 நிறுவனம் மேற்கொண்டுள்ளது.

  இந்த ஒப்பந்தத்தின் படி,  2024 முதல் 2031 ம் ஆண்டு வரை தென் ஆப்ரிக்காவில் நடைபெறும் சர்வதேச ஆண்கள் கிரிக்கெட் மற்றும் சர்வதேச மகளிர் கிரிக்கெட் போட்டிகளை எக்ஸ்க்ளுசிவ்வாக டிஜிட்டல் தளம் மற்றும் தொலைக்காட்சியில் உரிமையை Viacom18 பெற்றுள்ளது.

  இதன் மூலம், இந்தியா - தென் ஆப்ரிக்கா இடையேயான புகழ்பெற்ற மகாத்மா காந்தி - நெல்சன் மண்டேலா தொடர், இங்கிலாந்துக்கு எதிரான பசில் டி'ஒலிவேரா மற்றும் இலங்கை, பாகிஸ்தான், மேற்கிந்திய தீவுகள்,  ஆஸ்திரேலியா, மற்றும் பங்களாதேஷ்  சுற்றுப்பயணங்கள் ஆகிய கிரிக்கெட் தொடர்களை ஒளிபரப்பும் உரிமையை Viacom18 பெற்றுள்ளது.

  இது குறித்து Viacom18 Sports CEO அனில் ஜெயராஜ் கூறுகையில், உலக கிரிக்கெட்டில் அனைத்து வடிவங்களிலும் மிகவும் சவால் நிறைந்த  மற்றும் வலிமையான அணிகளில் தென்னாப்பிரிக்காவும் ஒன்றாகும். மேலும் இந்த கூட்டாண்மை இந்தியாவில் உள்ள கிரிக்கெட்டை விரும்பும் ரசிகர்களுக்கு சில சிறந்த போட்டிகளை வழங்கும்” என்று தெரிவித்துள்ளார்.

  இதையும் படிங்க: தென் ஆப்ரிக்கா டி20 லீக்: இந்தியாவில் ஒளிபரப்பும் உரிமையை பெற்ற Viacom18

  viacom18 உடன் கூட்டணி அமைத்திருப்பது மகிழ்ச்சி தருவதாக கூட்டாண்மையை வரவேற்று, CSA CEO, Pholetsi Moseki தெரிவித்துள்ளார்.

  இந்தியன் பிரீமியர் லீக், FIFA உலகக் கோப்பை கத்தார் 2022 ™, NBA, Diamond League, LaLiga, Serie A, Ligue 1 மற்றும் சிறந்த ATP மற்றும் BWF நிகழ்வுகள் உள்ளிட்ட உலகத் தரம் வாய்ந்த விளையாட்டு நிகழ்வுகளுடன் தற்போது தென் ஆப்ரிக்க டி20 லீக் தொடரையும் தென் ஆப்ரிக்காவில் நடைபெறும் கிரிக்கெட் போட்டிகளையும் சேர்ப்பது மூலம் Viacom18 இலாக்கா வலுபெறுகிறது.

  Published by:Murugesh M
  First published:

  Tags: Cricket, South Africa