வெஸ்ட் இண்டிஸ் அணிக்கு ராசியான மைதானம்! இந்திய அணி வெற்றி பெறுமா?

இந்த மைதானத்தில் இந்தியா இதுவரை ஒரு போட்டியில் கூட விளையாடியதில்லை. வெஸ்ட் இண்டில் அணி 15 போட்டிகளில் விளையாடி 7 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது.

news18
Updated: August 8, 2019, 12:15 PM IST
வெஸ்ட் இண்டிஸ் அணிக்கு ராசியான மைதானம்! இந்திய அணி வெற்றி பெறுமா?
இந்தியா - வெஸ்ட் இண்டிஸ்
news18
Updated: August 8, 2019, 12:15 PM IST
இந்தியா-வெஸ்ட் இண்டிஸ் அணிகளுக்கு இடையேயான முதல் ஒரு நாள் கிரிக்கெட் போட்டி இன்று நடைபெறவுள்ளது.

இந்தியா-வெஸ்ட் இண்டிஸ் அணிகளுக்கு இடையேயான முதல் ஒரு நாள் கிரிக்கெட் போட்டி இந்திய நேரப்படி இன்று இரவு 7 மணிக்கு கயானாவில் உள்ள ப்ரோவிடென்ஸ் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதற்கு முன்னதாக நடைபெற்ற மூன்று டி20 போட்டிகளில் இந்திய அணி 3 போட்டிகளிலும் வெற்றி பெற்று கோப்பையை வென்றது.

கயானா மைதானத்தில் நிகழ்த்தப்பட்ட சாதனைகள்:

இதுவரை 21 ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்றுள்ளது. முதல் போட்டி 2007-ம் ஆண்டு இலங்கை தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையே நடைபெற்றது.

இதுவரை நடைபெற்ற போட்டிகளில் 3 முறை 300 ரன்களுக்கு மேல் அடிக்கப்பட்டது. அதிகபட்சமாக 2017-ம் ஆண்டு பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் வெஸ்ட் இண்டிஸ் அணி 309 ரன்களை அடித்துள்ளது, குறைந்தபட்சமாக 2013-ம் ஆண்டு பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் வெஸ்ட் இண்டிஸ் அணி 98 ரன்களை அடித்தது.

குவானா அணியைச் சேர்ந்து சிவ்நரேன் சந்தர்பால் 5 போட்டிகளில் விளையாடி அதிகபட்சமாக 314 ரன்களை அடித்துள்ளார். 7 பேர் இந்த மைதானத்தில் சதம் அடித்துள்ளனர்.

பங்களாதேஷ் அணியைச் சேர்ந்த தமிம் இக்பால்-சகிப் அல் ஹசான் ஜோடி 2018-ம் ஆண்டு வெஸ்ட் இண்டிஸ் அணிக்கு எதிரான போட்டியில் 207 ரன்கள் அடித்து சாதனை படைத்தது

வெஸ்ட் இண்டிஸ் அணியைச் சேர்ந்த சுனில் நரேன் அதிகபட்சமாக 12 விக்கெட்டுகளை எடுத்துள்ளார், அவரை தொடர்ந்து ப்ராவோ 11 விக்கெட்டுகளையும், ஜேசன் ஹோல்டர் 10 விக்கெட்டுகளையும் எடுத்துள்ளனர்

5 பவுலர்கள் தலா ஒருமுறை 5 விக்கெட்டுகளை எடுத்துள்ளனர். ஆண்ட்ரு நெல், ஹசன் அலி, சாகித் அஃப்ரிடி, சார்ல் லாஞ்சிவெல்ட், சுனில் நரேன் ஆகியோர் 5 விக்கெட்டுகளை எடுத்துள்ளனர்.

இந்தியா இதுவரை ஒரு போட்டியில் கூட விளையாடியதில்லை. வெஸ்ட் இண்டிஸ் அணி 15 போட்டிகளில் விளையாடி 7 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது.

Also watch

First published: August 8, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...