முகப்பு /செய்தி /விளையாட்டு / ‘ஐ.பி.எல்.தொடரை தவிர்ப்பாரா கே.எல்.ராகுல்?’ – மீண்டும் விளாசிய வெங்கடேஷ் பிரசாத்

‘ஐ.பி.எல்.தொடரை தவிர்ப்பாரா கே.எல்.ராகுல்?’ – மீண்டும் விளாசிய வெங்கடேஷ் பிரசாத்

கே.எல்.ராகுல் - வெங்கடேஷ் பிரசாத்

கே.எல்.ராகுல் - வெங்கடேஷ் பிரசாத்

தனிப்பட்ட காரணங்களுக்காக ராகுலை நான் விமர்சிப்பதாக சிலர் கருதுகிறார்கள். ஆனால் உண்மை அதுவல்ல. ராகுல் மீண்டும் நன்றாக விளையாடி ரன்களை குவிக்க வேண்டும் என்று விரும்புகிறேன்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

மீண்டும் ஃபார்முக்கு வர ஐபிஎல் கிரிக்கெட் தொடரை கே.எல்.ராகுல் தவிர்ப்பாரா என்று இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் வெங்கடேஷ் பிரசாத் கேள்வி எழுப்பியுள்ளார். ‘என்னைப் பொருத்தளவில் சிறந்த 10 ஓபனிங் பேட்ஸ்மேன்கள் பட்டியலில் அவர் இடம்பெற மாட்டார். குல்தீப் யாதவ் ஒரு போட்டியில் ஆட்டநாயகன் விருதைப் பெற்று அடுத்த போட்டியில் விளையாடாமல் பெஞ்ச்சில் உட்கார வைக்கப்படுகிறார். போட்டிக்கு ஏற்ப குதிரைகள் மாற்றப்படுகின்றன. ஆனால் எந்தப் போட்டிக்கும் ஏற்ற குதிரை கே.எல். ராகுல் கிடையாது.’ என்று சில நாட்களுக்கு முன்பு ராகுலை வெங்கடேஷ் பிரசாத் விமர்சித்திருந்தார். இந்நிலையில் மீண்டும் மிகக் கடுமையான விமர்சனத்தை ராகுல் மீது வைத்துள்ளார் வெங்கடேஷ் பிரசாத்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 2 டெஸ்டில் 3 இன்னிங்ஸில் விளையாடியுள்ள கே.எல்.ராகுல் மொத்தமே 38 ரன்களை எடுத்திருக்கிறார். அவரை ஆடும் லெவனில் இருந்து நீக்கி, சுப்மன் கில், சூர்யகுமார் யாதவ் உள்ளிட்டோருக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும் என்று குரல்கள் வலுத்து வருகின்றனர். ஆனால் அவரை அடுத்து வரும் 2 டெஸ்ட்களுக்கு தேர்வுக்குழு தேர்வு செய்துள்ளது. இருப்பினும், அவர் வகித்து வந்த துணை கேப்டன் பொறுப்பு பறிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் வெங்கடேஷ் பிரசாத் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது- தனிப்பட்ட காரணங்களுக்காக ராகுலை நான் விமர்சிப்பதாக சிலர் கருதுகிறார்கள். ஆனால் உண்மை அதுவல்ல. ராகுல் மீண்டும் நன்றாக விளையாடி ரன்களை குவிக்க வேண்டும் என்று விரும்புகிறேன்.

ராகுல் உள்ளூர் போட்டிகளில் விளையாடி ஃபார்முக்கு திரும்ப வேண்டும். இப்போது ரஞ்சி போட்டிகள் முடிந்து விட்டன. எனவே இங்கிலாந்தில் நடைபெறும் கவுன்டி போட்டிகளில் ராகுல் விளையாட வேண்டும். இதைத்தான் முன்பு புஜாரா செய்திருந்தார். கவுன்டி போட்டிகளில் விளையாடி ஃபார்முக்கு திரும்புவதுதான் ராகுலுக்கு இருக்கு சிறந்த ஆப்ஷன். ஆனால் இதற்கு அவர் ஐ.பி.எல். தொடரை தவிர்க்க வேண்டுமே? இதை செய்வாரா? இவ்வாறு பிரசாத் கூறியுள்ளார். அவரது இந்த ட்விட்டர் பதிவு வைரலாகியுள்ளது. 16 லட்சம் பார்வையை கடந்துள்ள இந்த ட்வீட்டை 33 ஆயிரம் பேர் லைக் செய்துள்ளனர்.

First published:

Tags: Cricket, IPL 2023