ட்விட்டரில் தன்னை கலாய்த்த பாகிஸ்தான் செய்தியாளரை பங்கமாக கலாய்த்து அனுப்பிய வெங்கடேஷ் பிரசாத்!

ட்விட்டரில் தன்னை கலாய்த்த பாகிஸ்தான் செய்தியாளரை பங்கமாக கலாய்த்து அனுப்பிய வெங்கடேஷ் பிரசாத்!

வெங்கடேஷ் பிரசாத் vs ஆமீர் சோஹைல்

அந்த ஒரே ஒரு சாதனை தான் என கலாய்த்த பாகிஸ்தான் செய்தியாளரை பங்கமாக கலாய்த்து அனுப்பிய வெங்கடேஷ் பிரசாத்!

  • Share this:
சமூக வலைத்தளக்களை ஆக்கிரமித்துள்ளது ‘Indranagar ka Gunda ho mein’ என்ற வாசகம். களத்திலும் , வெளியிலும் அமைதியின் சொரூபமாக காட்சி தரும் இந்திய அணியின் முன்னாள் வீரர் ராகுல் டிராவிட்டை ஆக்ரோஷமாக காட்டியிருக்கும் ஒரு விளம்பரத்தில் வரும் வாசகம் தான் அது.

‘இந்திராநகர் ரெளடிடா...’ என ராகுல் டிராவிட் காரில் நின்றுகொண்டு சத்தம் போடும் வீடியோ க்ளிப் இணையத்தில் வட்டமடித்தது. அது டிராவிட் நடித்த கிரெடிட் கார்டு தொடர்பான விளம்பர படம் என்பது பின்னர் தெரியவந்தது. காரில் இருந்து சாலையில் செல்வோர்களை திட்டுவது, கிரிக்கெட் வைத்து கார் கண்ணாடிகளை உடைப்பது காரில் நின்று கொண்டு இந்திராநகர் ரெளடிடா.. என சத்தம் போடுவது என டெரராக நடித்திருப்பார் டிராவிட். இந்த விளம்பரத்தை டிராவிட் ரசிகர்கள் மற்றும் இந்திய கிரிக்கெட்டர்களும் ரசித்தனர். இணையத்திலும் நெட்டிசன்கள் இந்த வாசகத்தை வைரலாக பயன்படுத்தி வருகின்றனர்.

வெங்கடேஷ் பிரசாத் vs ஆமீர் சோஹைல்


இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரர் வெங்கடேஷ் பிரசாத், தனது ட்விட்டரில் ராகுல் டிராவிட்டின் அந்த வாசகத்தை பயன்படுத்தி ஒரு பதிவிட்டுள்ளார்.

பெரிய கோவக்காரரா இருப்பாரோ - டிராவிட் வீடியோவும் கோலி ரியாக்‌ஷனும்


அதில் “பெங்களூருவில் நான் ஆமீர் சோஹைலுக்கு எதிராக 14.5வது ஓவரில் நானும் இந்திரா நகர் ரவுடி தான்” என குறிப்பிட்டிருந்தார்.

வெங்கடேஷ் பிரசாத் அப்படி பதிவு செய்ததன் காரணம்:

1996ம் ஆண்டு உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் பெங்களூருவில் நடைபெற்ற பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் வெங்கடேஷ் பிரசாத்துக்கும், பாகிஸ்தான் வீரர் ஆமிர் சோஹைலுக்கும் இடையே களத்தில் மோதல் ஏற்படும் சூழல் ஏற்பட்டது. 15வது ஓவரின் 5வது பந்தில் வெங்கடேஷ் பிரசாத் வீசிய பந்தை பவுண்டரிக்கு விரட்டிய ஆமிர் சோஹைல் உன்னையும் அங்கே விரட்டி விடுவேன் என பொருள் பட சைகை காட்டினார். ஆனால் அடுத்த பந்திலேயே ஆமீர் சோஹைலை கிளீன் போல்டாக்கி பெவிலியனுக்கு அனுப்பி வைத்தார் வெங்கடேஷ் பிரசாத்.



இதனையடுத்து வெங்கடேஷ் பிரசாத்தின் அந்த பதிவுக்கு கமெண்ட் அடித்த பாகிஸ்தானைச் சேர்ந்த ஊடகவியலாளர் நஜீப் உல் ஹஸ்னைன் என்பவர் வெங்கடேஷ் பிரசாத்தை கிண்டலடிக்கும் வகையில் “வெங்கடேஷ் பிரசாத்தின் கிரிக்கெட் வாழ்க்கையில் ஒரே ஒரு சாதனை” என குறிப்பிட்டிருந்தார்.

பாகிஸ்தான் ஊடகவியலாளரின் கமெண்டுக்கு பதிலளித்த வெங்கடேஷ் பிரசாத், “இது மட்டும் இல்லை நஜீப் உல் ஹஸ்னைன் அவர்களே, அதன் பின்னர் மேலும் பல சாதனைகளை செய்திருக்கிறேன். 1999ம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற அடுத்த உலகக் கோப்பை தொடரில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் 27 ரன்களுக்கு 5 விக்கெட்களை வீழ்த்தினேன். 228 ரன்களை சேஸ் செய்ய முடியாமல் பாகிஸ்தான் அணி எங்களிடம் தோல்வியடைந்தது. கடவுள் உங்களை ஆசீர்வதிக்கட்டும்!” என பதிலடி தந்துள்ளார்.



வெங்கடேஷ் பிரசாத்தின் இந்த பதிலடியை ட்விட்டரில் நெட்டிசன்கள் பாராட்டி வருகின்றனர். உலகக் கோப்பை தொடரில் இதுவரை இந்திய அணியை பாகிஸ்தான் வீழ்த்தியதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.



1996ம் ஆண்டு முதல் 2001 வரை 33டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 96 விக்கெட்களையும், 161 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி 196 விக்கெட்களையும் வீழ்த்தியுள்ள வெங்கடேஷ் பிரசாத், இந்திய அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராகவும் இருந்துள்ளார்.
Published by:Arun
First published: