ரன்களை விரைவில் எடுக்க வேண்டும் என்ற கோலிக்கு இது ஏன் தெரியவில்லை?- வெங்சர்க்கார் காட்டம்

கோலி-ரகானே. | உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனல் 2021.

இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கு முன் 3 வார ஓய்வு குறித்து ‘பிரமாதம்’ என்று கிட்டத்தட்ட கேலியாக கருத்து தெரிவித்துள்ளார்.

  • Share this:
    நியூசிலாந்துக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு சரியாகத் தயாரித்துக் கொள்ளாமல் இந்திய அணி கோட்டை விட்டது என்று சாடும் வெங்சர்க்கார், இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கு முன் 3 வார ஓய்வு குறித்து ‘பிரமாதம்’ என்று கிட்டத்தட்ட கேலியாக கருத்து தெரிவித்துள்ளார்.

    நியூசிலாந்துக்கு எதிரான இறுதிப் போட்டியில் பேட்டிங் அதிக சொதப்பலாக பவுலிங் கொஞ்சம் சொதப்பலாக இந்திய அணி தோல்வி தழுவியது.

    இது தொடர்பாக முன்னாள் இந்திய கேப்டன் திலிப் வெங்சர்க்கார் கூறியதாவது:

    உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிகளில் இந்தியா நன்றாக ஆடியது, ஆனால் இறுதிப்போட்டிக்கு தேவையான தயாரிப்பு இல்லை. பயிற்சி ஆட்டம் எதுவும் இல்லாமல் நேரடியாக பைனலில் விளையாடுவது சாதகமற்றது. மாறாக நியூசிலாந்து அணி போட்டிக்குத் தயாராக இருந்தனர், இங்கிலாந்துடன் 2 டெஸ்ட் போட்டிகளில் ஆடினர்.

    இங்கிலாந்தில் 3 வார விடுமுறை பிறகு நேரடியாக டெஸ்ட் போட்டிகளில் ஆடுவது என்பதை எப்படி அனுமதிக்கின்றனர், ஏற்றுக் கொள்கின்றனர்? உலக டெஸ்ட் பைனலுக்குப் பிறகு ஒருவார கால இடைவேளை போதுமானது. எப்படி இந்த ஷெட்யூல் ஒப்புக் கொள்ளப்பட்டது என்று தெரியவில்லை.

    விராட் கோலி ரன்களை விரைவில் எடுப்பதில் தீவிரம் காட்ட வேண்டும் என்கிறார், ஆனால் தயாரிப்பில்லாமல் களமிறங்குவது குறித்து பேச மறுக்கிறார். இதில் தீவிரம் எங்கு போனது, 2 பயிற்சி ஆட்டங்களிலாவது ஆட வேண்டும் அல்லவா?

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    வீரர்கள் மேட்சுக்கு ஃபிட் ஆக இருக்கிறார்களா என்பது அப்போதுதானே தெரியும். பயிற்சி இருந்தால்தான் டெஸ்ட் போட்டிகளில் நேரடியாக எந்த லெந்தில் வீச வேண்டும் என்பது பவுலர்களுக்குத் தெரியும், எந்தப் பந்தில் ஷாட் ஆட வேண்டும் என்பது பேட்ஸ்மென்களுக்கும் தெரியும்?

    மேலும் இங்கிலாந்தில் ஆடும்போது 3 இறுதிப் போட்டிகளே சிறந்தது. நல்ல திறமை இருந்தும் இந்தியாவினால் ஐசிசி தொடரை வெல்ல முடியவில்லை என்பது ஆச்சரியமே.

    இவ்வாறு கூறினார் திலிப் வெங்சர்க்கார்.
    Published by:Muthukumar
    First published: