குறிப்பாக தன் அக்கா உயிரை விடும் தருணத்தில் பதற்றமடைந்தது தன்னால் மறக்க முடியாத ஒரு துன்பமாக தங்கி விட்டது என்றார். தாயையும், அக்காவையும் இரண்டு வார இடைவெளியில் பறிகொடுத்தார் வேதா கிருஷ்ணமூர்த்தி.
மேலும் இவரது குடும்பத்தில் 9 பேருக்கு கொரோனா ஏற்பட்டு போராடியுள்ளனர். ஆனால் துயருற்ற தன் குடும்பத்தினர் முன்னிலையில் தான் பட்ட வேதனையைக் காட்ட முடியாமல் தைரியமாக இருந்துள்ளார் வேதா.
இது தொடர்பாக அவர் ஈஎஸ்பிஎன் கிரிக் இன்போ இணையதளத்தில் கூறியதாவது:
விதி நமக்கு என்ன எழுதியிருக்கிறதோ அதுதான் நடக்கும் என்பதில் எனக்கு வலுவான நம்பிக்கை உள்ளது. ஆனால் என் அக்கா நிச்சயம் வீட்டுக்கு நலமாக திரும்பி விடுவார் என்றே நம்பினேன். ஆனால் அவர் வரவில்லை என்பது என்னை முற்றிலும் சிதைத்து விட்டது. நாங்கள் அனைவருமே துண்டு துண்டாக உடைந்து போனோம்.
நான் என் குடும்பத்துக்காக தைரிய முகத்தைக் காட்டினேன். அந்த 2 வாரங்களிலும் துயரத்திலிருந்து மீள்வது குறித்து கற்றுக் கொண்டேன். ஆனால் மீண்டும் மீண்டும் துக்கம் தொண்டையை அடைக்கிறது. அந்த நினைவு வந்து அச்சுறுத்துகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
என் குடும்பத்தில் எனக்கு மட்டும்தான் கொரோனா தொற்றவில்லை. ட்விட்டர் பக்கத்தைப் பார்த்த போதுதான் தெரிந்தது பலரும் எப்படி மருந்துகளுக்கும் ஆக்சிஜன்களுக்கும் கஷ்டப்பட்டார்கள் என்று தெரிந்தது.
மனவலிமை மிக முக்கியமானது. என் அக்கா வத்சலாவுக்கு உயிர் போகும் தருணத்தில் பதற்றம் தாக்கியது. இறந்தே போய்விட்டார். என் அம்மாவும் நிச்சயம் இறப்பதற்கு முன் பதற்றமடைந்திருப்பார், குடும்பத்தில் அனைவருக்கும் கொரோனா என்னைத் தவிர என்பதும் அவருக்கு கவலைகளை அதிகரித்திருக்கும்.
மனவலிமை என்பது நமக்கு நாமே ஏற்படுத்திக் கொள்வதுதான், இந்த அமைப்பில் அதற்கெல்லாம் தீர்வு இல்லை., இவ்வாறு கூறினார் வேதா கிருஷ்ணமூர்த்தி.
வேதா கிருஷ்ணமூர்த்தி இந்திய அணிக்காக 48 ஒருநாள் சர்வதேச போட்டிகளில், 76 டி20 போட்டிகளில் ஆடியுள்ளார். இங்கிலாந்து தொடருக்கு இவர் பரிசீலிக்கப்படவில்லை.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Corona death, Cricket, Indian women cricket