இந்திய அணிக்கு தேர்வான சுழற்பந்து வீச்சாளர் வருண் சக்கரவர்த்தி நடிகர் விஜய்யை நேரில் சந்தித்தார்.
ஐ.பி.எல் 2020 தொடரில் கொல்கத்தா அணிக்காக விளையாடியவர் வருண் சக்கரவர்த்தி. ஐ.பி.எல் 2020 தொடரில் ஒரு போட்டியில் 5 விக்கெட்களை வீழ்த்திய ஒரே வீரர் வருண் சக்கரவர்த்தி தான். டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் விளையாடிய இவர் 20 ரன்கள் கொடுத்து 5 விக்கெட்களை வீழ்த்தினார்.
ஐ.பி.எல் 2020 தொடரில் வருண் சக்கரவர்த்தி சிறப்பாக விளையாடியதால் ஆஸ்திரேலியா சுற்றுப்பயணத்தில் டி20 தொடரில் அவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. ஆனால் காயம் காரணமாக அவருக்கு பதிலாக மற்றொரு தமிழக வீரரான நடராஜனுக்கு அந்த வாய்ப்பு தற்போது வழங்கப்பட்டுள்ளது.
மேலும் வருண் சக்கரவர்த்தி நடிகர் விஜய்யின் தீவிர ரசிகர். நடிகர் விஜய்யின் தலைவா பட கெட்டப்பை இவர் தனது கையில் டாட்டூ குத்தியுள்ளார். இந்த புகைப்படம் இணையத்தில் வெளியாகி ரசிகர்களால் டிரெண்ட் செய்யப்பட்டது.
இந்நிலையில் நடிகர் விஜய்யின் அடையாறு அலுவலகத்திற்கு சென்ற வருண் சக்கரவர்த்தி விஜய்யை நேரில் சந்தித்தார். விஜய்யின் தீவிரான ரசிகரான வருண் சக்கரவர்த்தி அவரை நேரில் சந்தித்து தனது மகிழ்ச்சியை தெரிவித்து கொண்டார்.
நாடு முழுவதும் பரவும் கொரோனா குறித்த தற்போதைய விரிவான தகவல்கள்