2011-ல் ஆஷஸ் தொடரில் ஆஸ்திரேலியாவுக்காக தன் அறிமுக டெஸ்ட்டில் ஆடினார். 34 வயதாகும் உஸ்மான் கவாஜா 44 டெஸ்ட் போட்டிகளில் ஆடியுள்ளார். இவர் இப்போதல்ல முன்பே கூட ஆஸ்திரேலிய அணியில் விளையாடும் நிறவெறி பற்றி அதிர்ச்சியூட்டும் தகவல்களை வெளியிட்டுள்ளார்.
ஈஎஸ்பிஎன் கிரிக் இன்போ இணையதளத்துக்கு உஸ்மான் கவாஜா அளித்த பேட்டியில், "நான் இளம் வயதினனாக ஆஸ்திரேலியாவில் இருந்த போது, ‘நீ ஆஸ்திரேலியாவுக்கு ஆட முடியாது என்றும் என் தோலின் நிறம் அதுக்கு சரியாக இல்லை என்றும் எவ்வளவு முறை கூறியிருப்பார்கள், எத்தனை பேர் கூறியிருப்பார்கள்!
அணியில் நான் பொருந்த மாட்டேன் என்பார்கள். என்னை அணிக்கு தேர்வு செய்ய மாட்டார்கள் என்பார்கள். அப்போதைய மனநிலை இப்படி. ஆனால் இப்போது மாறிவருகிறது.
நான் கிரிக்கெட்டில் முழு மூச்சுடன் ஈடுபட்ட நாட்களில் ஆஸ்திரேலியாவில் உள்ள துணைக்கண்ட வம்சாவளியைச் சேர்ந்த மக்கள் என்னிடம் வந்து, ‘உங்களை டாப் பிளேயராக பார்ப்பதில் மகிழ்ச்சி என்பார்கள், என்னை இப்படிப் பார்ப்பது தாங்களையே ஆஸ்திரேலிய அணியில் பார்ப்பது போல் இருக்கிறது என்பார்கள். நாங்கள் ஆஸ்திரேலிய அணியை ஆதரிக்கிறோம், முன்பு செய்ததில்லை ஆனால் இப்போது செய்வோம் என்று கூறுவார்கள்.
இது மீண்டும் மீண்டும் நிகழ்ந்து கொண்டே இருந்தது. இப்படி நடக்கும் போது என்னுடைய பின்னணி பிரச்னை என்பதை உணர்ந்தேன். நிச்சயம் இது வித்தியாசத்தை ஏற்படுத்துகிறது. எனக்கு ஏன் ஆஸ்திரேலிய அணியை ஆதரிப்பதற்கு கொஞ்சம் கால அவகாசம் தேவைப்பட்டது என்பதை என் சிறுபிராயம் எனக்கு உணர்த்திய விஷயமாகப் பார்க்கிறேன்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
பாகிஸ்தானிலிருந்து நான் ஆஸ்திரேலியா வந்த போது நான் ஆஸ்திரேலியாவை ஆதரிக்கவில்லை. ஏனெனில் எனக்கு அப்படிப்பட்ட வாய்ப்பு கிடைக்கவில்லை” என்றார்.
இஸ்லாமாபாத்தில் பிறந்த உஸ்மான் கவாஜாவுக்கு 5 வயதாக இருக்கும் போதே இவரது குடும்பம் ஆஸ்திரேலியாவுக்குக் குடிபெயர்ந்தது. ஆஸ்திரேலியா கிரிக்கெட்டுக்கு இவர் ஆடத்தொடங்கிய பிறகுதான் இவரது குடும்பத்தினர் ஆஸ்திரேலிய கிரிக்கெட்டுக்கு ஆதரவு தெரிவிக்கத் தொடங்கினர்.
உஸ்மான் கவாஜா இப்போது ஆஸ்திரேலிய அணித்தேர்வுப் பரிசீலனையில் இல்லை, எந்த ஒரு வடிவத்திலும் கூட இவரை பரிசீலிக்கவில்லை.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Cricket, Pakistan Vs Australia, Racism