• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • Usain Bolt: உலகின் அதிவேக மனிதன் உசைன் போல்ட்டின் கவர் ட்ரைவ்- நண்பர்களுடன் கிரிக்கெட் ஆடி மகிழ்ச்சி

Usain Bolt: உலகின் அதிவேக மனிதன் உசைன் போல்ட்டின் கவர் ட்ரைவ்- நண்பர்களுடன் கிரிக்கெட் ஆடி மகிழ்ச்சி

நண்பர்களுடன் கிரிக்கெட்- உசைன் போல்ட்

நண்பர்களுடன் கிரிக்கெட்- உசைன் போல்ட்

“டெண்டுல்கர் அர்ப்பணிபுடைய வீரர். ஆக்ரோஷமானவர் ஆனால் கணக்கிடுதலுடன் கூடிய ஆக்ரோஷம் அது. ரசிகர்களுக்காகவும் ஆடுவார், நான் எப்படியோ அப்படித்தான் சச்சினும்” என்று சச்சின் பற்றி ஒரு கூர்மையான அவதானிப்பை மேற்கொண்டார் உசைன் போல்ட்

  • Share this:
    உலகின் அதிவேக மனிதன் 100மீ, 200மீ 4X100 மீ தடகள கிங் உசைன் போல்ட் தன் நண்பர்களுடன் கிரிக்கெட் ஆடிய வீடியோவை தன் சமூக வலைத்தளப்பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

    அவரது ரசிகர்கள் இதற்கு மகிழ்வுடன் கமெண்ட் போட்டு வருகின்றனர். உசைன் போல்ட் ஏற்கெனவே கால்பந்தில் பெரிய அளவில் போக முயன்று ஆஸ்திரேலிய கிளப் ஒன்றில் பயிற்சியும் எடுத்துக் கொண்டு சில போட்டிகளிலும் ஆடிப்பார்த்தார், ஆனால் ஏதோ ஒன்று அவரிடம் குறைவதாக பயிற்சியாளர்கள் கூற கால்பந்துக்கு முழுக்குப் போட்டு விட்டார்.

    ஆனால் உசைன் போல்ட் ஜமைக்காவைச் சேர்ந்தவர்க என்பதால் அதன் களிமண் தெருக்களில் கிரிக்கெட்டுடன் அவர் வளர்ந்திருப்பதால் கிரிக்கெட் மீது அவருக்கு ஒரு தனி ஈர்ப்பு எப்பவும் உண்டு.



     




    View this post on Instagram





     

    A post shared by Usain St.Leo Bolt (@usainbolt)





    நண்பர்களுடன் கிரிக்கெட் ஆடிய போல்ட் முதல் பந்தை தடுத்தாட அடுத்த பந்தை கவர் ட்ரைவ் ஆட அவரது நண்பர்கள் ஆச்சரியப் பாராட்டு தெரிவித்தனர்.. போல்ட்டும் ஐ டூ குயிக் மேன் என்று உற்சாகத்துடன் கூறினார்.

    2017-ல் தொழில்பூர்வ தடகளத்திலிருந்து ஓய்வு பெற்றார் உசைன் போல்ட். அப்போது முதல் வாழ்க்கையை மகிழ்ச்சியுடன் நடத்தி வருகிறார். 100 மீ, 200 மீ, 4 X100 மீ ஆகியவற்றில் உலக சாம்பியன் ஆன இவரது சாதனைகளை முறியடிப்பது இனி கடினமே என்கின்றனர் நிபுணர்கள். ஏனெனில் மெஷினை விட அதிவேகமாக ஓடியவர் உசைன் போல்ட்.

    8 முறை ஒலிம்பிக் தங்கம் வென்றுள்ளார். 2008, 2012, 2016 என்று 3 ஒலிம்பிக் தொடர்களில் தொடர்ச்சியாக 100மீ, 200 மீ தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார். சமீபத்தில் கோவிட் 19 வந்து அதிலிருந்து மீண்டார்.

    ஏற்கெனவே கிரிக்கெட் மீதான தன் ஆர்வத்தை உசைன் போல்ட் வெளிப்படுத்தியுள்ளார், போல்ட் பந்து வீசக்கூடியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

    ஒருமுறை சச்சின் டெண்டுல்கர் பேட்டிங் பற்றி அவர் கூறியது பலருக்கும் உசைன் போல்ட்டின் கிரிக்கெட் ஆர்வத்தின் மீது ஆச்சரியம் கலந்த உணர்வை ஏற்படுத்தியது,

    “டெண்டுல்கர் அர்ப்பணிபுடைய வீரர். ஆக்ரோஷமானவர் ஆனால் கணக்கிடுதலுடன் கூடிய ஆக்ரோஷம் அது. ரசிகர்களுக்காகவும் ஆடுவார், நான் எப்படியோ அப்படித்தான் சச்சினும்” என்றார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Muthukumar
    First published: