நீச்சல் குளத்தின் அடியாழத்தில் மயக்கமடைந்து உயிருக்குப் போராடிய வீராங்கனை: நீரில் குதித்து காப்பாற்றிய கோச்
நீச்சல் குளத்தின் அடியாழத்தில் மயக்கமடைந்து உயிருக்குப் போராடிய வீராங்கனை: நீரில் குதித்து காப்பாற்றிய கோச்
நீச்சல் வீராங்கனையை காப்பாற்றிய பயிற்சியாளர்
ஹங்கேரி புடாபெஸ்ட்டில் நடைபெற்ற உலக நீச்சல் போட்டியில் நீச்சல் குளத்தின் அடியாழத்தில் மயக்கமடைந்து உயிருக்குப் போராடிய அமெரிக்க வீராங்கனை அனிதா அல்வாரேஸ் என்பவரை அவரது பயிற்சியாளர் தண்ணீரில் குதித்து அவரை மீட்டு உயிரைக் காப்பாற்றியுள்ளார்.
ஹங்கேரி புடாபெஸ்ட்டில் நடைபெற்ற உலக நீச்சல் போட்டியில் நீச்சல் குளத்தின் அடியாழத்தில் மயக்கமடைந்து உயிருக்குப் போராடிய அமெரிக்க வீராங்கனை அனிதா அல்வாரேஸ் என்பவரை அவரது பயிற்சியாளர் தண்ணீரில் குதித்து அவரை மீட்டு உயிரைக் காப்பாற்றியுள்ளார்.
ஆண்ட்ரியா ஃபுயென்டெஸ் என்ற அந்தப் பயிற்சியாளர் புதன் இரவு நடந்த சோலோ ஃப்ரீ ஃபைனலின் போது மூச்சு விடாமல் குளத்தின் அடியில் மூழ்கியிருந்த அமெரிக்க அணியின் அல்வாரெஸை மீட்க தண்ணீரில் குதித்து அல்வாரேஸின் உயிரைக் காப்பாற்றினார்.
"எனக்குப் பயமாக இருந்தது. உயிர்காப்பாளர்கள் அங்கு இல்லாததால் நான் உள்ளே குதிக்க வேண்டியிருந்தது" என்று ஸ்பானிய செய்தித்தாள் மார்காவிற்கு பயிற்சியாளர் ஆண்ட்ரியா ஃபுயெண்டஸ் தெரிவித்தார்.
ஃபுவென்டெஸ், ஷார்ட்ஸ் மற்றும் டி-ஷர்ட் அணிந்து, குளத்தில் குதித்து அடியாழத்தில் மூழ்கி அங்கு மூச்சற்று கிடந்த அல்வாரெஸை மேற்பரப்புக்கு இழுத்து வந்தார். கரைக்கு வந்தவுடன் பார்த்தால் அல்வாரேஸ் மூச்சு நின்றிருந்தது. அதன் பிறகு தீவிர சிகிச்சையில் இப்போது அல்வாரேசுக்குப் பரவாயில்லை என்றார் ஃபுயெண்டஸ்.
பயிற்சியாளர் ஆண்ட்ரியா ஃபுயெண்டஸ் சாதாரணமானவர் அல்ல, இவரே 4 முறை ஒலிம்பிக் பதக்கம் வென்றவர். வழக்கமான நீச்சல் பயிற்சியில் அல்வாரேஸ் தன் கூடுதல் முயற்சியை மேற்கொண்ட போது மயங்கியுள்ளார் என்று ஸ்பானிய வானொலிக்கு ஃபுயெண்டஸ் தெரிவித்தார்.
இந்த எதிர்பாரா திடுக்கிடும் சம்பவத்தையடுத்து அல்வாரெஸ் வியாழக்கிழமை ஓய்வெடுக்கத் திட்டமிட்டுள்ளதாகவும், மருத்துவ சோதனைகளுக்குப் பிறகு வெள்ளிக்கிழமை அணி நிகழ்வில் போட்டியிடும் நம்பிக்கையில் இருப்பதாகவும் ஃபியுன்டெஸ் கூறினார்.
25 வயதான அல்வாரெஸ் தனது மூன்றாவது உலக சாம்பியன்ஷிப் போட்டிகளில் ஆடுகிறார். இவர் நீரில் மயக்கமடைவது இது முதல் முறையல்ல. கடந்த ஆண்டு பார்சிலோனாவில் நடந்த ஒலிம்பிக் தகுதிச் சுற்றில் அவர் மயங்கி விழுந்ததும் குறிப்பிடத்தக்கது.
Published by:Muthukumar
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.