ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

தீபாவளி ஷாப்பிங்கை நிறுத்திய விராட் கோலி - இந்தியா பாகிஸ்தான் போட்டியின் விளைவால் தொய்வடைந்த பரிவர்த்தனை

தீபாவளி ஷாப்பிங்கை நிறுத்திய விராட் கோலி - இந்தியா பாகிஸ்தான் போட்டியின் விளைவால் தொய்வடைந்த பரிவர்த்தனை

விராட் கோலி

விராட் கோலி

மறுநாள் தீபாவளியாக இருந்தும், UPI பரிவர்த்தனைகள் இவ்வளவு வீழ்ச்சியடைந்ததால், ‘மேக்ஸ் லைப்பின்’ தலைமை முதலீடு அதிகாரி, “விராட் கோலி நேற்று இந்திய மக்களை எதையும் வாங்க விடாமல் நிறுத்தி விட்டார்” என டுவீட் செய்திருக்கிறார்.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Delhi, India

  கடந்த 23ஆம் தேதி நடந்த இந்தியா பாகிஸ்தான் போட்டியில், விராட் கோலியின் அபார ஆட்டத்தால் இந்தியா வெற்றி பெற்றது. இறுதி வரை ஆட்டமிழக்காமல் 53 பந்துகளில் 82 ரன்களை எடுத்த இவர், ஆட்டநாயகன் விருதையும் தட்டி சென்றார்.

  இந்த போட்டி நடந்த நேரத்தில் இந்தியாவில் UPI பரிவர்த்தனைகள் அதிகம் நடைபெறாமல் நிறுத்தப்பட்டது என்று ‘மேக்ஸ் லைப்பின்’ தலைமை முதலீடு அதிகாரி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளர்.

  அவர் பகிர்ந்துள்ள பதிவில், காலை 9 மணி முதல் போட்டி துவங்கும் முன் வரை UPI பரிவர்த்தனைகள் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நல்ல ஏற்றம் கண்டது. ஆனால், போட்டி துவங்கிய பிறகு, (அதாவது பகல் 1.30 மணிக்கு) அந்த பரிவர்த்தனைகளில் சற்று வீழ்ச்சியை கண்டது.

  இதையும் படிக்க : அது நோ பால் தானா? கடைசி ஓவரில் ஏற்பட்ட பல குழப்பங்கள்: என்ன சொல்கிறது ஐசிசி ரூல்?

  போட்டி செல்ல செல்ல, மறுநாள் தீபாவளியாக இருந்தும் கூட, UPI பரிவர்த்தனைகள் அதிகம் நடைபெறாமல் மேலும் சரிவை நோக்கி சென்றது. குறிப்பாக விராட் கோலி இறுதியில் பேட்டிங் செய்யும் போது, UPI பரிவர்த்தனைகளில் 20 சதவீதம் வரை வீழ்ச்சியை கண்டது.

  மறுநாள் தீபாவளியாக இருந்தும், UPI பரிவர்த்தனைகள் இவ்வளவு வீழ்ச்சியடைந்ததால், ‘மேக்ஸ் லைப்பின்’ தலைமை முதலீடு அதிகாரி, “விராட் கோலி நேற்று இந்திய மக்களை எதையும் வாங்க விடாமல் நிறுத்தி விட்டார்” என டுவீட் செய்திருக்கிறார்.

  போட்டி முடிந்த பின், UPI பரிவர்த்தனைகள் மீண்டும் உயர்வதை நாம் பார்க்க முடிகிறது. 160 என்ற இலக்குடன் களம் இறங்கிய இந்திய அணி, 31/4 என்ற நிலையிலிருந்து விராட் கோலியின் அபார ஆட்டத்தால் , இலக்கை கடைசி ஓவரில் எட்டியது.

  Published by:Raj Kumar
  First published:

  Tags: India vs Pakistan, T20 World Cup, UPI, Virat Kohli