மோடி ஆட்சியில் இருக்கும் வரை இந்தியா - பாகிஸ்தான் இடையிலான உறவு மேம்பட வாய்ப்பே இல்லை என பிரபல கிரிக்கெட் வீரர் ஷாஹித் அஃப்ரிடி விமர்சித்துள்ளார்.
பாகிஸ்தானில் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த ஷாஹித் அஃப்ரிடியிடம் இருதரப்பு கிரிக்கெட் போட்டி குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், இந்தியா - பாகிஸ்தான் இடையிலான நல்லுறவு ஒரே ஒருவரால் மோசமடைந்துவிட்டதாக குற்றஞ்சாட்டினார்.
மோடி ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் வரை இருதரப்பு உறவு மேம்பட வாய்ப்பில்லை என்றும், உண்மையில் மோடிக்கு என்ன வேண்டும் என்றே தெரியவில்லை என்றும் ஷாஹித் அஃப்ரிடி விமர்சித்துள்ளார். பிரதமர் மோடி எப்போதும் எதிர்மறையாகவே சிந்திப்பதாகவும் குற்றஞ்சாட்டிய ஷாஹித் அஃப்ரிடி, இருநாட்டு மக்களும் எல்லையில் சுமூகமாகவே பயணிப்பதாகவும் தெரிவித்தார்.
Published by:Sivaranjani E
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.