• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • 28 வயதில் ஓய்வு... உலகக் கோப்பையை வென்ற இந்திய கிரிக்கெட் கேப்டன் அறிவிப்பு

28 வயதில் ஓய்வு... உலகக் கோப்பையை வென்ற இந்திய கிரிக்கெட் கேப்டன் அறிவிப்பு

உன்முக் சந்த்

உன்முக் சந்த்

தற்போது 28 வயதாகும் உன்முக் சந்த், தேசிய அளவிலான கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெறப்போவதாக அறிவித்துள்ளார்.

  • Share this:
    தேசிய கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறப்போவதாக உன்முக் சந்த் அறிவித்துள்ளார்.

    2012-ம் ஆண்டு ஜூனியர் உலகக் கோப்பையை வென்ற இந்திய அணிக்கு தலைமை தாங்கியவர்தான் உன்முக் சந்த். இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவிற்கு எதிராக  111 ரன்கள் விளாசி இறுதிவரை களத்தில் நின்ற இவரது ஆட்டம் அவ்வளவு எளிதில் மறக்கக்கூடியது இல்லை. அதன்பின்னர் இந்திய ஏ அணியில் தொடர்ந்து இடம்பிடித்து வந்த இவர், பல நேரங்களில் கேப்டனாகவும் செயல்பட்டுள்ளார்.

    இந்திய அணிக்கு அடுத்த விராட் கோலி கிடைத்துவிட்டார் என்று உன்முக் சந்த் பலரால் பாராட்டப்பட்டாலும் இந்திய அணியில் அவருக்கு வாய்ப்பு கிடைக்காததால் அவர் அமெரிக்க கிரிக்கெட் அணிக்கு விளையாட முடிவு செய்துள்ளார். அவருடன் 2012 இந்திய அணியில் விளையாடிய சந்தீப் ஷர்மா ஐபிஎல் தொடரிலும், ஹனுமா விஹாரி இந்திய டெஸ்ட் அணியிலும் விளையாடி வருகின்றனர்.

    ஆனால், இந்திய சீனியர் அணியில் விளையாட ஒருமுறை கூட இருவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. தற்போது 28 வயதாகும் உன்முக் சந்த், தேசிய அளவிலான கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெறப்போவதாக அறிவித்துள்ளார். அதேசமயம் மற்ற நாடுகளுக்காக விளையாட தயாராக உள்ளதாக அறிவித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    பிசிசிஐ அமைப்பின் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றுள்ள உன்முக் சந்த், அமெரிக்காவில் உள்ள லீக் தொடர்களிலும், பல்வேறு நாடுகளில் நடக்கும் தொடர்களிலும் விளையாடப் போவதாகத் தெரிவித்துள்ளார்.

    அமெரிக்காவில்அடுத்த தலைமுறையினருக்கான கிரிக்கெட்டை வளர்க்கும் முயற்சியில் அந்நாடு ஈடுபட்டு வருகிறது. இதனால் உன்முக் சந்த், அமெரிக்காவின் சான் பிரான்சிக்ஸோ நகரின் பே ஏரியா பகுதிக்கு குடிபெயர்ந்தார். பல ஆண்டுகள் லீக் போட்டியில் விளையாடுவதற்கான ஒப்பந்தங்களை உன்முக் சந்த் செய்துள்ளார்.

    உன்முக் சந்த் இதுவரை இதுவரை 67 முதல் தரப்போட்டிகளில் விளையாடி 3379 ரன்கள் எடுத்துள்ளார். அதேப்போன்று ஏ பிரிவில் 120 போட்டிகளில் 4505 ரன்களும், 77 டி20 போட்டிகளில் 1565 ரன்களும் எடுத்துள்ளார். 2011 - 2016 ஐபிஎல் தொடரில் விளையாடி உள்ள இவர் 21 போட்டிகளில் 300 ரன்கள் எடுத்தார். இதையடுத்து ஐபிஎல் தொடரிலும் உன்முக் சந்த ஏலம் எடுக்காமல் இருக்கப்பட்டார் என்பது குறிப்பிடதக்கது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vijay R
    First published: