Home /News /sports /

பகை அரசியலில்தான் - இங்கிலிஷ் கவுண்ட்டியில் சேர்ந்து விளையாடும் ரிஸ்வான், புஜாரா

பகை அரசியலில்தான் - இங்கிலிஷ் கவுண்ட்டியில் சேர்ந்து விளையாடும் ரிஸ்வான், புஜாரா

ரிஸ்வான் - புஜாரா

ரிஸ்வான் - புஜாரா

இங்கிலாந்து கிரிக்கெட் கவுண்ட்டி அணியான சசெக்ஸ் அணியில் பாகிஸ்தான் விக்கெட் கீப்பர் முகமது ரிஸ்வான், இந்திய டெஸ்ட் வீரர் செடேஸ்வர் புஜாரா ஆகியோர் இருவரும் சேர்ந்து ஆடுவது ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்து இருநாட்டு ரசிகர்களும் உற்சாகமடைந்துள்ளனர்.

மேலும் படிக்கவும் ...

    கடந்த 2014 முதலே கவுன்டி கிரிக்கெட்டில் இந்திய கிரிக்கெட் அணியின் மூத்த வீரர்களில் ஒருவரான புஜாரா விளையாடி வருகிறார். வெவ்வேறு அணிக்காக விளையாடி வந்த புஜாரா,

    இதே அணிக்காக பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் முகமது ரிஸ்வானும் நடப்பு சீசனில் விளையாடுகிறார். முதல் முறையாக கவுன்டி கிரிக்கெட்டில் அவர் விளையாடுகிறார்.

    இந்த முறை இருநாட்டு வீரர்களும் ஒரே அணிக்காக கவுன்டி கிரிக்கெட் களத்தில் விளையாடுவது ரசிகர்களின் கவனத்தையும், வரவேற்பையும் பெற்றுள்ளது. அவர்கள் இருவரும் சசெக்ஸ் அணியின் ஜெர்ஸியில் இணைந்து ஒன்றாக நிற்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வலம் வந்து கொண்டுள்ளது.

    இப்போது சசெக்ஸ் அணி டெர்பிஷையர் அணிக்கு எதிராக விளையாடி வருகிறது. புஜாராவும், ரிஸ்வானும் ஆடும் லெவனில் இடம் பெற்றுள்ளனர். இந்த போட்டியில் தற்போது டெர்பிஷையர் அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது.

    சசெக்ஸ் அணியின் பேட்டிங் செய்யும் போது புஜாரா மற்றும் ரிஸ்வான் களத்தில் ஒன்றாக விளையாட வேண்டும் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து உள்ளனர்.

    இந்தியாவையும் பாகிஸ்தானையும் பிரித்தது பிரிட்டீஷாரே சேர்த்து வைப்பதும் பிரிட்டீஷாரே என்ற ரீதியில் ரசிகர்கள் ட்வீட் செய்து வருகின்றனர்.
    Published by:Muthukumar
    First published:

    Tags: India vs Pakistan

    அடுத்த செய்தி