நியூசிலாந்து அணிக்கு எதிரான தொடரில் காயம் காரணமாக விலகிய ஷிகார் தவானுக்கு பதிலாக ஹர்திக் பாண்டியா ஏன் தேர்வாகவில்லை என்பது குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளது.
இந்திய அணியின் ஆல்-ரவுண்டரான ஹர்திக் பாண்டியா முதுகில் ஏற்பட்ட காயம் காரணமாக அறுவை சிகிச்சை எடுத்து கொண்டார். அறுவை சிகிச்சைக்கு பின் ஓய்விலிருந்த ஹர்திக் பாண்டியா தற்போது இந்திய அணியில் மீண்டும் இடம்பிடிக்க தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகிறார். 26 வயதான ஹர்திக் பாண்டியா சமீபத்தில் நியூசிலாந்தின் தொடரின் 2ம் பாதியில் நான் உடற்தகுதி பெறுவேன் என்று கூறியிருந்தார்.
Also Read : நியூசிலாந்தில் ரோஹித் சர்மாவிற்கு காத்திருக்கும் மிகப் பெரிய சவால்...! அடையாளம் காட்டிய சச்சின்
ஆனால் அண்மையில் நடந்த உடற்தகுதி தேர்வில் தோல்வியடைந்ததால் அவர் நியூசிலாந்து அணிக்கு எதிரான தொடரில் பரீசிலிக்கப்படவில்லை. சமீபத்தில் தான் பாண்டியாவுக்கு கண்காணிப்பு கேமிரா முன் பந்துவீச்சு சோதனை நடத்தப்பட்டது. காயத்திலிருந்து மீளும் வீரர்களுக்கு கேமிரா முன் சோதனை நடத்துவது வழக்கமான ஒன்று தான். ஆனால் ஹர்திக் கூறியது போன்று சரியான உடற்தகுதியில் இல்லை என்பது சோதனையின் மூலம் தெரியவந்தது.
பாண்டியா சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுவதற்கு முன் ஒரு உள்ளூர் போட்டியிலாவது அவரது உடற்தகுதியை நிரூபிக்க வேண்டும். அப்போது தான் நியூசிலாந்து தொடருக்கு அடுத்து இந்தியாவில் நடைபெறும் தென்னாப்பிரிக்கா எதிரான ஒரு நாள் தொடரில் அவரால் பங்கேற்க முடியும் என்பது உறுதியாகி உள்ளது.
Also Read : துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்ய முயன்றேன் - இந்திய அணியின் முன்னாள் பிரபல வீரர் பரபரப்பு பேட்டி
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.