• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • தொடர் நாயகன் விருதை வார்னருக்கா கொடுப்பது?- அநியாயம்- புலம்பும் ஷோயப் அக்தர்

தொடர் நாயகன் விருதை வார்னருக்கா கொடுப்பது?- அநியாயம்- புலம்பும் ஷோயப் அக்தர்

ஷோயப் அக்தர்

ஷோயப் அக்தர்

நியூசிலாந்து அணியை டி20 உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியா அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது, இதில் டேவிட் வார்னர் 38 பந்துகளில் 4 பவுண்டரிகள் 3 சிக்சர்களுடன் 53 ரன்கள் எடுத்து தொடரில் 289 ரன்களை எடுத்தார். இதனால் அவருக்கு தொடர் நாயகன் விருது வழங்கப்பட்டது, இது அநியாயம் என்கிறார் அக்தர்.

  • Share this:
    நியூசிலாந்து அணியை டி20 உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியா அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது, இதில் டேவிட் வார்னர் 38 பந்துகளில் 4 பவுண்டரிகள் 3 சிக்சர்களுடன் 53 ரன்கள் எடுத்து தொடரில் 289 ரன்களை எடுத்தார். இதனால் அவருக்கு தொடர் நாயகன் விருது வழங்கப்பட்டது, இது அநியாயம் என்கிறார் அக்தர்.

    ஏனெனில் பாபர் ஆசம் 303 ரன்களை எடுத்துள்ளார், பாகிஸ்தான் கேப்டன் ஆசமுக்கு அல்லவா தொடர் நாயகன் விருதை அளித்திருக்க வேண்டும் இது என்ன அநியாயம் என்கிறார் ஷோயப் அக்தர். மிட்செல் மார்ஷ் 50 பந்துகளில் 77 ரன்கள் விளாசி ஆட்ட நாயகன் விருதைத் தட்டிச் சென்றார்.

    இதனையடுத்து ஷோயப் அக்தர் தன் ட்விட்டர் பக்கத்தில் தன் ஆதங்கத்தை கொட்டித் தீர்த்துள்ளார், “பாபர் ஆசம் டி20 உலகக்கோப்பை தொடர் நாயகன் விருது பெறுவார் என்று ஆசையோடு எதிர்பார்த்தேன். நிச்சயம் வார்னருக்குக் கொடுத்தது நியாயமற்றது” என்று கூறியுள்ளார்.

    பாபர் ஆசம் இந்த உலகக்கோப்பையில் 303 ரன்களில் 28 பவுண்டரி 6 சிக்சர்களை விளாசியுள்ளார். ஸ்ட்ரைக் ரேட் 125. மாறாக வார்னர் லேட் ஆகத்தான் பார்முக்கு வந்தார். கடைசி 6 போட்டிகளில் 3 அரைசதங்களை விளாசினார்.



    அதே போல் தொடர் நாயகனாக உண்மையில் பரிசீலிக்கப்பட வேண்டிய இன்னொரு வீரர் ஆஸ்திரேலியாவின் ஆடம் ஜாம்ப்பா என்கிறார் ஆஸ்திரேலிய கேப்டன் ஆரோன் பிஞ்ச். ஜாம்ப்பா 13 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். ஒருவேளை இவருக்குக் கொடுத்திருந்தால் ஜெயவர்தனே என்ன கூறுவார் 16 விக்கெட்டுகள் எடுத்த ஹசரங்காவுக்கு கொடுத்திருக்க வேண்டாமா என்று கூறியிருக்கலாம்.

    இதையும் படிக்கலாமே: நாக் அவுட்டில் நியூசிலாந்து அணி ஆஸ்திரேலியவை வீழ்த்தி இத்தனையாண்டுகள் ஆகிறதா?

    ட்ரெண்ட் போல்ட்டும் 13 விக்கெட்டுகள் எடுத்துள்ளார். பேட்டிங்கிலும் சரி, பவுலிங்கிலும் சரி டாப் 10-ல் இந்திய வீரர்கள் யாருமே இல்லை. இந்நிலையில் ஷோயப் அக்தர் பாபர் ஆசமுக்கு கிடைக்கவில்லை என்று குமுறுகிறார்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Muthukumar
    First published: