ரசிகர்களை சந்திக்க மறுத்த ஹர்திக் பாண்டியா! (வீடியோ)

Under-fire #HardikPandya ignores fans | மற்ற வீரர்கள், செல்பி மற்றும் ஆட்டோகிராப் போட்டுக்கொடுத்த நிலையில் பாண்டியாவின் செயல் ரசிகர்களுக்கு அதிருப்தி அடைந்தனர்.

news18
Updated: January 11, 2019, 7:01 PM IST
ரசிகர்களை சந்திக்க மறுத்த ஹர்திக் பாண்டியா! (வீடியோ)
ரசிகர்களை தவிர்த்த ஹர்திக் பாண்டியா. (Video Grab)
news18
Updated: January 11, 2019, 7:01 PM IST
சிட்னியில் ரசிகர்களை சந்திக்க ஹர்திக் பாண்டியா மறுப்பு தெரிவித்து ஒதுங்கிச் செல்லும் வீடியோ வெளியாகியுள்ளது.

இந்திய கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா மற்றும் கே.எல்.ராகுல் ஆகியோர், தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பெண்களின் வாழ்க்கை முறை மற்றும் இனவெறியைத் தூண்டுதல் உள்ளிட்டவை குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பதிலளித்தனர்.

Hardik Pandya, KL Rahul, ஹர்திக் பாண்டியா, கே.எல்.ராகுல்
‘காபி வித் கரண்’ நிகழ்ச்சியில் கே.எல்.ராகுல் மற்றும் ஹர்திக் பாண்டியா. (Twitter/HardikPandya)


கடுமையான விமர்சனங்கள் வந்ததை அடுத்து, தனது தவறுக்கு ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா மன்னிப்பு கேட்டார். இந்த விவாகாரம் குறித்து, ஹர்திக் பாண்டியா மற்றும் கே.எல்.ராகுல் ஆகியோர் விளக்கம் அளிக்க வேண்டும் என இந்திய கிரிக்கெட் வாரியம் (பிசிசிஐ) நோட்டீஸ் அனுப்பி இருந்தது. இருவருக்கும் 2 போட்டிகளில் விளையாடத் தடைவிதிக்க திட்டமிட்டுள்ளதாக பிசிசிஐ நிர்வாகக்குழு தலைவர் வினோத் ராய் தெரிவித்திருந்தார்.

Hardik Pandya, ஹர்திக் பாண்டியா
‘காபி வித் கரண்’ நிகழ்ச்சியில் ஹர்திக் பாண்டியா. (Twitter)


இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி, ஹர்திக் பாண்டியா, கே.எல்.ராகுல் விவகாரத்தில் பிசிசிஐ-யின் முடிவுக்காக காத்திருப்பதாக தெரிவித்திருந்தார். இந்நிலையில், ஹர்திக் பாண்டியா, கே.எல்.ராகுல் ஆகியோருக்கு தடைவிதித்துள்ளதாக நிர்வாகக்குழு உறுப்பினர் டயானா எடுல்ஜி கூறியுள்ளார்.

Diana Edulji, டயானா எடுல்ஜி
பிசிசிஐ நிர்வாகக்குழு உறுப்பினர் டயானா எடுல்ஜி.
Loading...
இதனால், ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் அணியில் ஹர்திக் பாண்டியா, கே.எல்.ராகுல் ஆகியோர் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. முதல் ஒருநாள் போட்டிக்காக சிட்னி மைதானத்தில் பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த ஹர்திக் பாண்டியா, தடைவிதிக்கப்பட்ட செய்தியை அறிந்து வருத்தம் அடைந்தார்.

Hardik Pandya, ஹர்திக் பாண்டியா
ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா வலைப்பயிற்சியில் ஈடுபட்டார். (Twitter/BCCI)


பின்னர், பாண்டியா பயிற்சி முடித்துவிட்டு வெளியே வரும்போது, அவரிடம் செல்பி மற்றும் ஆட்டோகிராப் வாங்க ரசிகர்கள் காத்திருந்தனர். ஆனால், ரசிகர்களைத் தவிர்க்கும் விதமாக ஒதுங்கிச் சென்றார். அப்போது எடுக்கப்பட்ட வீடியோ வெளியாகியுள்ளது.ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் பரவும் ‘தோனி ஃபீவர்’

மற்ற வீரர்கள், செல்பி மற்றும் ஆட்டோகிராப் போட்டுக்கொடுத்த நிலையில் பாண்டியாவின் செயலால் ரசிகர்கள் அதிருப்தி அடைந்தனர்.

Photos: அனல் பறக்கும் வலைப்பயிற்சியில் இந்திய அணி!

Also Watch...

First published: January 11, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...