வெஸ்ட் இண்டீசில் நடைபெறும் அண்டர் 19 உலகக்கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டியில் இந்தியா வெற்றி பெற்று கோப்பையை வெல்வது உறுதி என்று இந்திய யு-19 கேப்டன் யாஷ் துல்லின் தந்தை நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
வெஸ்ட்இண்டீசில் 14-வது ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி (19 வயதுக்கு உட்பட்டோர்) நடைபெற்று வருகிறது. ஆன்டிகுவாவில் நேற்று நடைபெற்ற அரைஇறுதி ஆட்டத்தில் 4 முறை சாம்பியனான இந்திய அணி, 3 தடவை சாம்பியனான ஆஸ்திரேலியாவை எதிர்கொண்டது.
இப்போட்டியில் இந்திய அணி 96 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்திய அணியின் கேப்டன் யாஷ் துல் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். யாஷ் துல் சதமெடுத்தார். ரஷீத் 94 ரன்கள் எடுத்தார். இருவரும் சேர்ந்து 204 ரன்கள் கூட்டணி அமைத்தனர். பிறகு ஆஸ்திரேலியாவை ஸ்பின் பந்து வீச்சில் 71/1லிருந்து 125/7 என்று ஆக்கி பிறகு வெற்றியைப் பெற்று இறுதிக்குள் நுழைந்தது இந்திய அணி.
இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி ஜூனியர் உலக கோப்பை போட்டியில் இறுதி சுற்றுக்குள் தொடர்ந்து 4வது முறையாக அடியெடுத்து வைத்தது. இறுதிப்போட்டியில் இந்தியா-இங்கிலாந்து அணிகள் பலப்பரிட்சை நடத்த உள்ளன.
இந்த நிலையில், யாஷ் துல்லின் தந்தை விஜய் துல், இந்திய அணி கோப்பையை வெல்லும் என்று நம்பிக்கையுடன் உள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், “இந்திய அணி சிறப்பாக விளையாடி வருகிறது. எதிரணிகளும் சிறப்பாக விளையாடின. அப்படி இருக்கையில், இந்திய அணி கோப்பையை வெல்ல வேண்டும் என்பதே ஒட்டு மொத்த தேசத்தின் விருப்பமாக உள்ளது. நிச்சயம் இந்திய அணி கோப்பையை கைப்பற்றும் என்பதில் சந்தேகமில்லை.
ஒரு கேப்டனாக யாஷ் துல் சிறப்பான கிரிக்கெட் குறித்த வியூகங்களை கொண்டவர். எந்த பந்துவீச்சாளர் எந்த பேட்ஸ்மேனுக்கு எதிராக பந்து வீசினால் சரியாக இருக்கும் என்பதை அவர் துல்லியமாக கணித்து போட்டியின் நடுவே உடனுக்குடன் மாற்றங்களை செய்பவர்.
Also Read: அடுத்த விராட் கோலியாகும் யாஷ் துல்- ஆஸ்திரேலியாவுக்கு எதிராக கோலி போலவே சாதனை சதம்
இந்திய அணியுடன் தேசிய கிரிக்கெட் அகாடமியின் தலைவர் வி வி எஸ் லக்ஷ்மண் பயணித்துள்ளார். அவர் உடனிருப்பது வீரர்களுக்கு மிகுந்த உத்வேகத்தை அளிக்கும்” என்று அவர் தெரிவித்துள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Cricket, ICC world cup