சாம்பியனைத் தவற விட்ட இந்தியா: முதன்முறையாக உலகக் கோப்பையைத் தட்டிச் சென்ற வங்கதேசம்

சாம்பியனைத் தவற விட்ட இந்தியா: முதன்முறையாக உலகக் கோப்பையைத் தட்டிச் சென்ற வங்கதேசம்
வங்கதேச வீரர்கள்
  • Share this:
தென்ஆப்பிரிக்காவில் நடைபெற்ற 19 வயதுக்கு உட்பட்ட உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியாவை வீழ்த்தி வங்கதேசம் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது.

தென் ஆப்பிரிக்கா நாட்டில் நடைபெற்றுவரும் 19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்திய அணியும், வங்கதே அணியும் மோதின. டாஸ் வென்ற வங்கதேசம், பந்துவீச்சைத் தேர்வு செய்தது. முதலில் பேட் செய்த இந்திய அணி, 47.2 ஓவரில் 10 விக்கெட் இழப்புக்கு 177 ரன்கள் மட்டுமே குவித்தது.

அடுத்ததாக களமிறங்கிய வங்கதேச அணியின் தொடக்க வீரராக பர்வேஸ் ஹோஸைன் இமோன் மற்றும் தன்ஷித் ஹசன் களமிறங்கினர். தன்ஷித் 17 ரன்களிலும் அடுத்ததாக களமிறங்கிய மஹ்முதுல் ஹசன் ஜாய் 8 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். பின்னர் களமிறங்கிய தவ்ஹித் ஹிரிடோய் ரன் ஏதும் எடுக்காமலும் ஆட்டமிழந்தனர்.


தொடர்ந்து விக்கெட் இழந்த நிலையில், பின்னர் 5-வதுதாக களமிறங்கிய கேப்டன் அக்பர் அலி, விக்கெட் இழப்பைக் கட்டுப்படுத்தி நிதானமாக ஆடினார். அவர், நிதானமாக ஆடி ரன் சேர்த்தார். இதற்கிடையில் மழை பெய்த நிலையில், ஆட்டம் நிறுத்தப்பட்டது. பின்னர், டக்வொர்த் லூயிஸ் முறையில் 46 ஓவர்களுக்கு 170 ரன்கள் எடுக்கவேண்டும் என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

அந்த இலக்கை வங்கதேச அணி 42.1 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 170 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இதன்மூலம், வங்கதேசம் முதன்முறையாக உலகக் கோப்பையைக் கைப்பற்றியது.

Also see:
First published: February 9, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்