‘பன்டாஸ்டிக்’, சூழ்நிலைக்கேற்ப ஆடவேண்டும் என்ற பார்முலாவை உடைத்தெறிந்தார்: ரிஷப் பந்த்திற்கு குவியும் பாராட்டுக்கள்

‘பன்டாஸ்டிக்’, சூழ்நிலைக்கேற்ப ஆடவேண்டும் என்ற பார்முலாவை உடைத்தெறிந்தார்: ரிஷப் பந்த்திற்கு குவியும் பாராட்டுக்கள்

ரிஷப் பந்த் “மிகப்பெரிய பாராட்டு கில்லி, உங்களை பார்த்து வளர்ந்தவன் நான்” என்று நன்றிப்பதிவிட்டுள்ளார்.

ரிஷப் பந்த் “மிகப்பெரிய பாராட்டு கில்லி, உங்களை பார்த்து வளர்ந்தவன் நான்” என்று நன்றிப்பதிவிட்டுள்ளார்.

 • Share this:
  அகமதாபாத் டெஸ்ட் போட்டியில் 121/5 என்ற நிலையில் இறங்கிய ரிஷப் பந்த் திகைப்பூட்டும் அதிரடியில் 118 பந்துகளில் 101 ரன்கள் விளாச வாஷிங்டன் சுந்தர் 96 ரன்களையும் அக்சர் படேல் 43 ரன்களையும் எடுக்க இந்தியா 365 ரன்களைக் குவித்தது.

  உலகின் தலைசிறந்த ஸ்விங் பவுலர் ஜேம்ஸ் ஆண்டர்சனை ரிவர்ஸ் ஸ்கூப் அடித்தது பரவலாக பேசப்பட்டு வருகிறது. ஆடம் கில்கிறிஸ்ட்டுடன் தான் ஒப்பிடப்படுவதை விரும்பும் ரிஷப் பந்த்தை கில்கிறிஸ்டே பாராட்டி விட்டார்.

  இதற்கு ரிஷப் பந்த் “மிகப்பெரிய பாராட்டு கில்லி, உங்களை பார்த்து வளர்ந்தவன் நான்” என்று நன்றிப்பதிவிட்டுள்ளார்.

  இந்நிலையில் மற்ற முன்னாள் வீரர்கள் பலரும் ரிஷப் பந்த் இன்னிங்ஸ் குறித்து தங்கள் சமூக வலைத்தளப் பக்கங்களில் பகிர்ந்ததாவது:

  சஞ்சய் மஞ்சுரேக்கர்: இது கிரேசி ஹிட்டிங். இரண்டாவது புதிய பந்தில் அடிப்பதற்கு முன்பாக மூன்றரை மணி நேரம் திடமான தடுப்பாட்டம், நம்ப முடியவில்லை.  கங்குலி: என்ன மாதிரி ஆடுகிறார்! நெருக்கடியில் இறங்கி என்ன ஒரு இன்னிங்ஸ். இது முதல் முறை அல்ல, கடைசி முறையும் அல்ல. வரும் ஆண்டுகளில் அனைத்டு வடிவங்களிலும் அனைத்து கால சிறந்த வீரராக இருப்பார். இப்படியே ஆக்ரோஷமாக ஆடு. அதனால்தான் மேட்ச் வின்னர், ஸ்பெஷல்.

  கெவின் பீட்டர்சன்: பிரிஸ்பனுக்கு அடுத்து இங்கும்... Pant is a PLAYER!என்று பாராட்டியுள்ளார்.

  இயன் பெல்: கண்களைக் கவரும் இன்னிங்ஸ், ஆனால் இது மேட்ச் வின்னிங். பரபரப்பான சதம் பந்த் அடித்தது.

  ஹர்பஜன் சிங்: ஸ்பெஷல் பிளேயர், ஸ்பெஷல் ஹண்ட்ரட்!

  மைக்கேல் வான்: ஸ்பெஷல் பிளேயர்

  நாசர் ஹுசைன்: ‘இப்படித்தான் ஆடுவேன்’ என்று ஒரு வீரர் சொல்லும் போது எனக்கு பித்துப் பிடித்து விடும் போல் இருக்கிறது. சூழ்நிலைக்கு ஏற்ப ஆடுவது என்ற பார்முலா எவ்வளவு பெரிய நான்சென்ஸ் என்பதை பந்த் ஒரு இன்னிங்ஸில் நிரூபித்து விட்டார்.

  முகமது அசாருதீன்: இந்தியப் பிட்ச்களில் இப்படித்தான் ஆட வேண்டும், அவர் சரியான அணுகுமுறையைக் கடைப்பிடித்தார். பாசிட்டிவாக ஆட வேண்டும். நான் பந்த் பேட்டிங்குக்கு பெரிய விசிறி.

  இர்பான் பத்தான்: டாப் இன்னிங்ஸ், ரிஷப் பந்த் அபாரம்! தான் அறிமுகம் ஆன நாளிலிருந்து முக்கியத் தருணங்களில் சில தரமான ஆட்டங்களை வெளிப்படுத்தி வருகிறார் ரிஷப் பந்த்.
  Published by:Muthukumar
  First published: