’ஏற்றுக்கொள்ளவே முடியாது’! இங்கிலாந்து நாட்டுக்கு கண்டனம் தெரிவித்த சுனில் கவாஸ்கர்

மைதானத்தை முழுமையாக மூடாதது மோசமானது. ஏற்றுக்கொள்ளவே முடியாதது. இது மிக முக்கியமான தொடர்.

news18
Updated: June 16, 2019, 3:37 PM IST
’ஏற்றுக்கொள்ளவே முடியாது’! இங்கிலாந்து நாட்டுக்கு கண்டனம் தெரிவித்த சுனில் கவாஸ்கர்
இங்கிலாந்து மைதானம்
news18
Updated: June 16, 2019, 3:37 PM IST
இந்தியா பாகிஸ்தான் போட்டி நடைபெறும் மைதானத்தில் மழை பெய்யும் போது, அந்த மைதானத்தை முழுமையாக மூடவில்லை என்று இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் கடுமையாக கண்டனம் தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்து நாட்டில் உலகக் கோப்பைத் தொடர் நடைபெற்றுவருகிறது. இதுவரையில் நடைபெற்ற உலகக் கோப்பைத் தொடரைவிட, இந்தத் தொடரில் இதுவரையில் நான்கு போட்டிகள் மழையால் ரத்தாகியுள்ளது. இது கிரிக்கெட் ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், இங்கிலாந்து நாட்டில் மழைக் காலம் என்று தெரிந்தும் அந்த நாட்டில் போட்டிகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது என்று ஐ.சி.சி மீதும் கடும் விமர்சனம் எழுந்துள்ளது. இந்தநிலையில், மான்செஸ்டர் நகரிலுள்ள ஓல்டு டிரஃப்போர்டு மைதானத்தில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி நடைபெற்றுகிறது. இன்று காலை நேரத்தில் மைதானத்தில் மழை பெய்தது. முன்னதாக, வெள்ளிகிழமை, சனிக்கிழமைகளில் கடும் மழை பெய்தது. அதனால், மைதானம் தார்பாய் போட்டு மூடப்பட்டிருந்தது.

போட்டி நடைபெறுமா என்று கேள்வி எழுந்தது. இந்தநிலையில், மழைக்காக மைதானத்தை மூடிய விவகாரம் குறித்து இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் கேள்வி எழுப்பியுள்ளார். அவர், ‘மைதானத்தை முழுமையாக மூடாதது மோசமானது. ஏற்றுக்கொள்ளவே முடியாதது. இது மிக முக்கியமான தொடர். இங்கிலாந்து நாட்டின் வானிலை நிலவரம் உங்களுக்குத் தெரியும்.

எனவே, மைதானத்தை பாதுகாப்பதற்கான உரிய உபகரணங்களை வைத்திருக்க வேண்டும். என்னுடைய பார்வையில் மைதானத்தை சரிவர முடாதது ஏற்றுக் கொள்ளமுடியாதது. இங்கிலாந்தில் மைதானம் முழுவதும் மூடப்பட்டிருந்தது. கொல்கத்தாவில் கூட மைதானம் முழுவதும் மூடப்பட்டிருந்தது. அதனை, ஏன் இங்கிலாந்து பின்பற்றவில்லை’ என்று தெரிவித்தார்.

அதேபோல, சவுரவ் கங்குலியும், ‘மழையின்போது மைதானம் மூடப்பட்டிருந்த விவகாரம் குறித்து கேள்வி எழுப்பியிருந்தார். உலகக் கோப்பை பொறுப்பாளர்கள், மைதானத்தை முழுவதுமாக மூட வேண்டும் என்று கூறியிருந்தார்.

Also see:
Loading...
First published: June 16, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...