இந்தியா – இலங்கை அணிகளுக்கு இடையே நேற்று நடந்த இறுதிப்போட்டியில் இலங்கை அணி ஃபீல்டிங் செய்தபோது எதிர்பாராத விதமாக விபத்து ஏற்பட்டது. இதில் இலங்கை அணியை சேர்ந்த 2 வீரர்கள் காயம் அடைந்தனர். அவர்களில் ஒருவர் ஸ்ட்ரெச்சரில் கொண்டு செல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்திய அணியின் பேட்டிங்கின்போது, 43ஆவது ஓவரை இலங்கை வீரர் சமிகா கருணாரத்னே வீசினார். அந்த ஓவரில் கோலி ஒரு பந்தை பவுண்டரிக்கு விரட்டினார். இதனை தடுப்பதற்காக இலங்கை அணியின் ஜெஃப்ரி வாண்டர்சே மற்றும் ஆஷென் பண்டாரா ஆகியோர் முயற்சித்தனர்.
அப்போது எதிர்பாராத விதமாக இருவரும் மோதிக் கொண்டு காயம அடைந்தனர். இதையடுத்து ஆட்டம் சிறிது நேரம் தடைப்பட்டது. இடையே, களத்திற்கு திரும்ப இரு வீரர்களும் முதலுதவி எடுத்துக் கொண்டு ஸ்ட்ரெட்சிங்கில் ஈடுபட்டனர். இது பலன் அளிக்காத நிலையில் வலியால் துடித்துக் கொண்டிருந்த ஜெஃப்ரி வாண்டர்சே மைதானத்திலிருந்து பணியாளர்கள் உதவியுடன் வெளியேற்றப்பட்டார். இன்னொரு வீரரான ஆஷென் பண்டாராவுக்கு அதிக பாதிப்பு ஏற்பட்டதை தொடர்ந்து, அவர் ஸ்ட்ரெட்சரில் கொண்டு செல்லப்பட்டார்.
இந்த சம்பவம் ரசிகர்கள் மத்தியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது. இலங்கை அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரை இந்திய அணி 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியிருந்தது. இந்நிலையில் நேற்று நடந்த கடைசி ஒருநாள் போட்டியிலும் வெற்றி பெற்று இலங்கை அணியை இந்தியா ஒயிட்வாஷ் அடித்துள்ளது.
Hope they are fine .#INDvSL #SLvsIND pic.twitter.com/88rmudNMNJ
— Mr द्विवेदी 🔥 (@Dwivedi1311) January 15, 2023
முதலில் பேட்டிங் செய்த இந்தியா 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 390 ரன்களை எடுத்தது. அதிகபட்சமாக விராட்கோலி 166 ரன்களும், சுப்மன் கில் 116 ரன்களும் எடுத்தனர். இதையடுத்து பேட் செய்த இலங்கை அணி 22 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 73 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Cricket