Home /News /sports /

நான் ஒன்றும் செய்யவில்லை, எல்லாம் வல்ல இறைவனின் ஆசிதான் - உம்ரன் மாலிக் தந்தை உருக்கம்

நான் ஒன்றும் செய்யவில்லை, எல்லாம் வல்ல இறைவனின் ஆசிதான் - உம்ரன் மாலிக் தந்தை உருக்கம்

உம்ரன் மாலிக் -ஹர்திக் பாண்டியா

உம்ரன் மாலிக் -ஹர்திக் பாண்டியா

பர்வேஸ் ரசூலுக்குப் பிறகு ஜம்மு காஷ்மீரில் இருந்து இந்தியாவுக்காக விளையாடும் இரண்டாவது கிரிக்கெட் வீரர் என்ற பெருமையை உம்ரான் மாலிக் பெற்றுள்ளார். ஆனால் அந்த ஸ்பின்னரை இப்போது காணோம். இப்போது உம்ரன் மாலிக் அணியில் நிலையான இடம்பிடித்தால் சரி என்பதே ரசிகர்களின் பிரார்த்தனையாக உள்ளது.

மேலும் படிக்கவும் ...
    பர்வேஸ் ரசூலுக்குப் பிறகு ஜம்மு காஷ்மீரில் இருந்து இந்தியாவுக்காக விளையாடும் இரண்டாவது கிரிக்கெட் வீரர் என்ற பெருமையை உம்ரான் மாலிக் பெற்றுள்ளார். ஆனால் அந்த ஸ்பின்னரை இப்போது காணோம். இப்போது உம்ரன் மாலிக் அணியில் நிலையான இடம்பிடித்தால் சரி என்பதே ரசிகர்களின் பிரார்த்தனையாக உள்ளது.

    தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இந்தியாவின் வரவிருக்கும் டி20 தொடருக்கு வேகப்பந்து வீச்சாளர் உம்ரான் மாலிக்கிற்கு தேர்வுக் குழு ஞாயிற்றுக்கிழமை முதல் அழைப்பு விடுத்துள்ளது. பெரிய பெரிய வீரர்களின் ஹெல்மெட்களைப் பதம் பார்த்தார் உம்ரன் மாலிக், அதுவும் ஹர்திக் பாண்டியாவுக்குக் கொடுத்து பிறகு எடுத்தாரே பார்க்கலாம், இன்னும் ஹர்திக் பாண்டியா அதனை மறக்க மாட்டார், இப்போது இருவரும் ஒரே ஓய்வறை என்றாலும் கூட லேசான ஒரு பகை இருக்கவே செய்யும்.

    உம்ரன் மாலிக் 14 போட்டிகளில் இந்த ஐபிஎல் தொடரில் 22 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இவர் இருக்கும் பார்முக்கு தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக நேரடியாக வாய்ப்புக் கொடுக்க வேண்டியதுதான் என்கிறார் ரவி சாஸ்திரி. ஒரு காலத்தில் சச்சின் டெண்டுல்கர் ஒரு பேட்டராக 16 வயதில் அறிமுகமாவதற்கு முன்னரேஎவ்வளவு பரபரப்பையும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தினாரோ அதே அளவு பரபரப்பையும் எதிர்பார்ப்பையும் உருவாக்கியுள்ளார் உம்ரன் மாலிக்.

    இவர்களெல்லாம் ரசிகர்களை மைதானத்துக்கு ஈர்ப்பவர்கள், ஒரு பேட்டர் எப்படி சிக்சர் அடிப்பதை பார்ப்பது மகிழ்ச்சி தருமோ அதே போல் 155 கிமீ வேகம் வீசும் ஒருவரை மைதானத்தில் வந்து அந்த ரன் அப்புடன் பார்ப்பது ஒரு பெரிய உற்சாகம்தான், அந்த வகையில் சச்சின் எப்படி ரசிகர்களை ஈர்த்தாரோ அப்படித்தான் உம்ரன் மாலிக்கும் தற்போது ஈர்த்துள்ளார்.

    இந்நிலையில் உம்ரன் மாலிக்கின் தந்தை அப்துல் ரஷீத் தன் மகனின் இந்த வளர்ச்சியில் தன் பங்கு ஒன்றுமில்லை எல்லாம் உம்ரன் மாலிக்கின் உழைப்பு மற்றும் அர்ப்பணிப்பு, அதற்கும் மேலாக எல்லாம் வல்ல இறைவனின் ஆசி என்று கூறியுள்ளார்:

    "என்னை வாழ்த்த மக்கள் குவிந்த வண்ணம் இருக்கின்றனர், நான் இப்போது வீட்டிற்குச் சென்று கொண்டாட்டங்களில் கலந்துகொள்வேன். இணையத்தில் செய்திகளைப் பார்த்தேன். தேசிய அணியின் சீருடையை அணிவதை விட பெரிய சாதனை என்ன இருக்க முடியும்

    ஐபிஎல்-ல் அவர் சிறப்பாக விளையாடி நம் அனைவருக்கும் பெருமை சேர்த்துள்ளார், மேலும் நாடு முழுவதும் அவருக்குப் பின்னால் திரண்ட விதம் ஒரு குடும்பமாக நாங்கள் நன்றிக்கடன் பட்டவர்கள் என்பதை காட்டுகிறது. உம்ரனுக்கு இந்த தேசம் முழுதுமான ஆதரவு கிடைத்துள்ளது.

    உம்ரனுக்கு ஒரு நாள் வெற்றி கிடைக்கும் என்ற தன்னம்பிக்கை இருந்தது. தனது திறமை மற்றும் உழைப்பின் மீது நம்பிக்கை வைத்து அதற்காக கடுமையாக உழைத்தார். இது முழுக்க முழுக்க அவருடைய வெற்றி மற்றும் எல்லாம் வல்ல இறைவனின் ஆசீர்வாதம். அவர் கடுமையாக உழைத்தார், கடவுள் அவருக்கு ஆதரவளித்தார். அவரது கடின உழைப்புக்கான பெருமையை நான் தட்டிச் செல்ல தகுதி அற்றவன். என்றார் உம்ரன் மாலிக் தந்தை.
    Published by:Muthukumar
    First published:

    Tags: India vs South Africa, IPL 2022

    அடுத்த செய்தி