ஆஸ்திரேலியா - பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டியில் முதல் நாள் ஆட்டத்தில் பந்துவீச்சாளர்கள் வீசிய 21 நோ-பால்களை நடுவர்கள் தவறவிட்டு உள்ளனர்.
ஆஸ்திரேலியா - பாகிஸ்தான் அணிகள் முதல் டெஸ்ட் போட்டி பிரிஸ்பேன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 240 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது.
அதையடுத்து பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 2ம் நாள் ஆட்ட முடிவில் 1 விக்கெட் இழப்பிற்கு 312 ரன்கள் எடுத்துள்ளது. தொடக்க வீரர் டேவிட் வார்னர் 151 ரன்களுடன் களத்தில் உள்ளார்.
இந்த டெஸ்ட் போட்டியின் முதல் நாளில் 21 நோ-பால்கள் வீசப்பட்டுள்ளன. ஆனால் நடுவர்கள் இதனை கவனிக்காமல் தவறவிட்டுள்ளனர். இந்த டெஸ்ட் போட்டியை ஒளிபரப்பும் சேனல் 7 இந்த வீடியோவை வெளியிட்டுள்ளது.
ஆஸ்திரேலிய பந்துவீச்சாளரும் ஐசிசி பந்துவீச்சாளர்கள தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் கம்மின்ஸ் அதிகமான நோ-பால்கள் வீசியுள்ளார். நடுவர்கள் நோ-பால்கள் வீசுவதை கவனிக்காமல் விடுவது ஐசிசிக்கு நெருக்கடியை தரும் என்று சேனல் 7 தெரிவித்துள்ளது.
நோ-பாலில் வீரர்கள் அவுட்டாகமல் இருக்க வரும் ஐபிஎல் தொடரில் புதிய முறை நடைமுறைப்படுத்த உள்ளது. நோ-பால்களை மட்டும் கவனிக்க தனி நடுவர் இதற்கென நியமனம் செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடதக்கது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.