ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

ஒரு ஓவருக்கு 5 பந்துகள்தான்.. அம்பயர்கள் தவறால் ரசிகர்கள் ஆத்திரம்!

ஒரு ஓவருக்கு 5 பந்துகள்தான்.. அம்பயர்கள் தவறால் ரசிகர்கள் ஆத்திரம்!

ஆஸ்திரேலியா vs ஆப்கானிஸ்தான்

ஆஸ்திரேலியா vs ஆப்கானிஸ்தான்

யாருமே கவனிக்காமல் விட்டதால் அந்த ஓவர் வெறும் 5 பந்துகளுடன் முடிவுக்கு வந்துவிட்டது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu | australia

  டி20 உலகக்கோப்பை தொடரில் ஒரு ஓவருக்கு 5  பந்துகள்தான் என அம்பயர்களே முடிவு செய்துவிட்டதால் ரசிகர்கள் கொந்தளித்துள்ளனர்.

  அடிலெய்டில் உள்ள ஓவல் மைதானத்தில்  நடைபெற்ற டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று ஆஸ்திரேலியா மற்றும் ஆஃப்கானிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. பரபரப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் ஆஃப்கானிஸ்தான் அணியை கடைசி ஓவரில் 4 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி வீழ்த்தியது.

  ஆஸ்திரேலிய அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்கள் இழப்புக்கு 168 ரன்களை குவித்தது. தொடர்ந்து ஆடிய ஆஃப்கானிஸ்தான் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 164 ரன்களை மட்டுமே எடுத்து தோல்வியை தழுவியது. குறைந்த ரன்ரேட்டுடன் தான் ஆஸ்திரேலியா வென்றதால், அரையிறுதிக்கு செல்லும் வாய்ப்பு குறைந்துவிட்டது. இந்நிலையில் இந்த போட்டியில் அம்பயர்கள் செய்த ஒரு தவறு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

  அதாவது ஆஃப்கானிஸ்தான் அணி ஒரு ஓவரில் 5 பந்துகளை மட்டுமே வீசியுள்ளது. ஆட்டத்தின் 4வது ஓவரை நவீன் உல் ஹக் வீசினார். அதில் 4வது பந்தில் ரன் எடுக்க முயன்ற போது, ஓவர் த்ரோ ஆனதால் பரபரப்படைந்தது. இதே பதற்றத்துடன் 5வது பந்தை வீச, அது டாட் பாலாக மாறியது. ஆனால் அந்த ஓவர் த்ரோ பதற்றத்தில் இருந்த நவீன் உல் ஹக், தனது ஓவர் முடிந்துவிட்டது என நினைத்துக்கொண்டு 5வது பந்துடன் நடையை கட்டினார். அவர் தான் கவனிக்கவில்லை என்று பார்த்தால், களத்தில் இருந்த 2 அம்பயர்களும் பார்ப்பதற்கு தவறிவிட்டனர்.

  ALSO READ | ”என்னங்க இதெல்லாம் ஊர் கிரிக்கெட்டே பரவல போல” ஆஸ்திரேலிய போட்டியில் ஒரு ஓவரில் 5 பந்துகள் மட்டுமே வீசப்பட்டதால் ரசிகர்கள் அதிர்ச்சி

  களநடுவர்கள் தவறவிடுவதை பார்ப்பதற்கு தான் 3வது நடுவர் இருக்கிறார். ஆனால் அவரும் கவனிக்கவில்லை. யாருக்குமே அது தெரியாததால், அந்த ஓவர் வெறும் 5 பந்துகளுடன் முடிவுக்கு வந்துவிட்டது.

  டி20 உலகக்கோப்பை போன்ற மிகப்பெரும் தொடரில், அம்பயர்கள் இப்படியா? கவனக்குறைவாக இருப்பது, என ரசிகர்கள் மோசமாக விமர்சித்து வருகின்றனர். இதுகுறித்து ஐசிசி நடவடிக்கை எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

  Published by:Anupriyam K
  First published:

  Tags: Afghanistan, Australia, T20, T20 World Cup