ஜேசன் ஹோல்டரிடம் ‘சாரி’ கேட்ட அம்பயர் - வைரல் வீடியோ

இரண்டாவது டெஸ்ட் போட்டியில் தனது தவறான கணிப்புக்காக மேற்கிந்திய அணியின் கேப்டன் ஜேசன் ஹோல்டரிடம் அம்பையர் களத்திலேயே மன்னிப்பு கேட்டார்.

Lingam A S | news18
Updated: October 15, 2018, 6:40 PM IST
ஜேசன் ஹோல்டரிடம் ‘சாரி’ கேட்ட அம்பயர் - வைரல் வீடியோ
இரண்டாவது டெஸ்ட் போட்டியில் தனது தவறான கணிப்புக்காக மேற்கிந்திய அணியின் கேப்டன் ஜேசன் ஹோல்டரிடம் அம்பையர் களத்திலேயே மன்னிப்பு கேட்டார்.
Lingam A S | news18
Updated: October 15, 2018, 6:40 PM IST
மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இளம் வீரர் பிரித்திவி ஷா தொடர் நாயகன் விருதை வென்றுள்ளார். இரண்டாவது டெஸ்ட் போட்டியில் பிரித்திவி ஷா பேட்டிங்கின் போது ஜேசன் ஹோல்டர் எடுத்த விக்கெட்டுக்கு அவுட் தராமல் பின்னர் ரிவியூவில் அது அவுட் என தெரிந்ததும் ஹோல்டரிடம் அம்பயர் இயான் கோல்ட் மன்னிப்பு கேட்டுள்ளார்.

மேற்கிந்திய தீவுகள் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்தியா கைப்பற்றியது. இந்த தொடரில் 18 வயதே ஆன இளம் வீரர் பிரித்திவி ஷா அறிமுகமானார். முதல் போட்டியிலேயே சதம் அடித்த அவர், மொத்தம் 237 ரன்கள் குவித்து தொடர் நாயகன் விருதை பெற்றார்.

தொடர் நாயகன் விருது வென்ற பிரித்திவி ஷாஇந்நிலையில், ஐதராபாத்தில் நடந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்தியாவுக்கு 74 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இதனை அடுத்து, பிரித்திவி ஷா - ராகுல் ஜோடி களமிறங்கியது. இன்னிங்சின் ஐந்தாவது ஓவரில் ஜேசன் ஹோல்டர் வீசிய பந்தை பிரித்திவி ஷா எதிர்கொண்டார். அப்போது, பந்து மேலே எழும்பும் என கணித்த அவர் கீழே குனிந்தார்.

ஆனால், பந்து மிகவும் தாழ்வாக வந்து ஷாவின் கையில் பட்டது. ஸ்டெம்புக்கு நேராக அவரது கை இருந்ததால், ஹோல்டர் எல்.பி.டபிள்யூ கேட்டார். ஆனால், அம்பயர் இயான் கோல்ட் அவுட் கொடுக்கவில்லை. இதனால், ஹோல்டர் உடனே ரிவியூ கேட்டார். மூன்றாவது அம்பயர் பரிசீலனையின் போது, பந்து பட்ட இடம், இடது ஸ்டெம்புக்கு நேராக இருந்தது. அதாவது, பந்து கையில் பட வில்லை என்றால் இடது ஸ்டெம்பில் பட்டிருக்கும்.

எனினும், மூன்றாவது அம்பயர் அவுட் கொடுக்கவில்லை. களத்தில் இருந்த அம்பயரின் முடிவையே அவரும் உறுதி செய்தார். தனது தவறை உணர்ந்த அம்பயர் இயான் கோல்ட் உடனே, ஹோல்டரிடம் ‘சாரி’ என கூறினார். இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகின்றது.

Loading...
See Also:
First published: October 15, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...