கிரிக்கெட் போட்டியின் போது உயிரிழந்த அம்பயர்! ரசிகர்கள் அதிர்ச்சி

Vijay R | news18-tamil
Updated: October 9, 2019, 3:05 PM IST
கிரிக்கெட் போட்டியின் போது உயிரிழந்த அம்பயர்! ரசிகர்கள் அதிர்ச்சி
Vijay R | news18-tamil
Updated: October 9, 2019, 3:05 PM IST
பாகிஸ்தானில் நடைபெற்ற உள்ளூர் போட்டியின் போது நடுவர் உயிரிழந்த சம்பவம் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கராச்சியில் உள்ள டி.எம்.சி மைதானத்தில் நேற்று உள்ளூர் கிளப் கிரிக்கெட் போட்டி நடைப்பெற்றது. இந்தப் போட்டியில் 52 வயதான நஷீம் ஷேக் நடுவரில் ஒருவராக இருந்தார்.

கிரிக்கெட் போட்டியின் நடுவே நஷீம் திடிரென மைதானத்திலேயே சுருண்டு விழுந்தார். அவருக்கு உடனடியாக முதலுதவி கொடுக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார்.


மருத்துவமனையில் நஷீமை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் வழியிலேயே மாரடைப்பு காரணமாக உயிரிழந்ததாக தெரிவித்தனர். கிரிக்கெட் போட்டியின் போது நடுவர் உயிரிழந்த சம்பவம் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Also Watch

First published: October 9, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...