பிக் பாஷ் கிரிக்கெட் தொடரில் அவுட் கேட்ட போது அம்பயர் மூக்கை சொறிந்ததை வீரர்கள் தவறாக புரிந்து கொண்ட சம்பவத்தால் மைதானத்தில் சிரிப்பலை ஏற்பட்டது.
ஆஸ்திரேலியாவின் உள்ளூர் கிரிக்கெட் தொடரான பிக் பாஷ் தொடரில் மெல்போர்ன் ரெனிகேட்ஸ் - அடிலெய்டு ஸ்டிரைக்கர்ஸ் அணிகள் மோதின. பரபரப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் அடிலெய்டு அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
பிக் பாஷ் தொடரில் மெல்போர்ன் அணிக்காக ஆப்கானிஸ்தான் அணியில் ஆல்-ரவுன்டர் ரஷித் கான் விளையாடி வருகிறார். இந்த போட்டியின் 17வது ஓவரை ரஷித் கான் வீசினார்.
இவர் வீசிய பந்து பேட்ஸ்மேனின் கால்பேடில் பட்டதால் எல்.பி.டபுள்.யூ கேட்கப்பட்டது. அதற்கு அம்பயர் முதலில் அவுட் கொடுப்பது போன்று கைதூக்கி, சட்டென முடிவை மாற்றியது போல் மூக்கை சொறிந்தார். அம்பயர் கையை தூக்கியதும் அவுட் என ரஷித் கான் மற்றும் சகவீரர்கள் விக்கெட்டென நினைத்து உற்சாகமடைந்தனர்.
பின் வீரர்களிடம் அம்பயர் தனது நிலைபாட்டை எடுத்துக் கூறி அவுட் இல்லை என்று அறிவித்தார். அம்பயரின் இந்த முடிவால் உற்சாகத்தில் இருந்த ரஷித் கான் ஏமாற்றமடைந்தார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.