இந்திய அணிக்குப் பின்னடைவு: உமேஷ் யாதவும் இந்தியா திரும்புகிறார்
இந்திய அணி அபாரமான மீட்டெழுச்சி வெற்றி பெற்றதன் மகிழ்ச்சியைக் கொண்டாட முடியாமலும் பங்களிப்பு செய்ய முடியாமலும் உமேஷ் யாதவ் காயமடைந்து வெளியேறினார்.

உமேஷ் யாதவ்.
- News18 Tamil
- Last Updated: December 31, 2020, 10:50 AM IST
ஐபிஎல் கிரிக்கெட்டுக்கு முக்கியத்துவம் கொடுத்து டெஸ்ட் தொடருக்கு முன்பாக அதை நடத்தி முடித்ததில் இஷாந்த் சர்மா, ஷமி, தற்போது உமேஷ் யாதவ் ஆகியோர் காயம் காரணமாக முக்கியத் தொடரான ஆஸ்திரேலியத் தொடரில் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
வீரர்களை வைத்து பிசிசிஐயும் ஐபிஎல் -ஐ வைத்து வீரர்களும் நன்றாக சம்பாதிக்கின்றனர், ஆனால் கடைசியில் முக்கியமான டெஸ்ட் தொடரை இழப்பது பற்றி பிசிசிஐக்கும் கவலையில்லை, வீரர்களுக்கும் பெரிய அளவில் கவலையில்லை. இதுதான் பணம் செய்யும் வேலை. நம்மை அறியாமலேயே நம்மிடமுள்ள உயிர்ச்சத்துக்களை பணம் பறிமுதல் செய்து விடும். ஒரு டெஸ்ட் வீரருக்கு அதிலிருந்து காயத்தினால் விலகுவது பெரிய மன உளைச்சலை ஏற்படுத்தும், ஆனால் ஐபிஎல் பணம் அத்தகைய மனநிலையிலிருந்து வீரர்களை வெளியே கொண்டு வந்து விடுகிறது. இந்த மனநிலை ஆட்டத்தினுள்ளும் வர நீண்ட காலம் தேவைப்படாது.
உமேஷ் யாதவ் ஆஸ்திரேலியாவுக்கு எதிராகத்தான் அதிக விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார். ஆனால் மெல்போர்ன் டெஸ்ட் போட்டியின் முக்கியமான 2வது இன்னிங்சில் 3 ஓவர்களுக்கும் மேல் தாக்குப் பிடிக்க முடியாமல் உமேஷ் வெளியேறினார். இந்திய அணி அபாரமான மீட்டெழுச்சி வெற்றி பெற்றதன் மகிழ்ச்சியைக் கொண்டாட முடியாமலும் பங்களிப்பு செய்ய முடியாமலும் உமேஷ் யாதவ் காயமடைந்து வெளியேறினார்.
இந்நிலையில் மெல்போர்ன் டெஸ்ட்டில் பாதியுடன் அவரது இந்தத் தொடர் முடிவுக்கு வந்துள்ளது.
காயத்திலிருந்து மீண்டு வந்து மீண்டும் இந்திய அணியில் இடம்பிடிப்பதெல்லாம் இப்போது சாதாரண காரியமல்ல.இந்த ஐபிஎல் கிரிக்கெட்டினால் இந்திய அணி இழந்த நல்ல டெஸ்ட் பவுலர் புவனேஷ்வர் குமார். இப்போது ஷமி, இஷாந்த், உமேஷ் யாதவ் என்று பட்டியல் நீள்கிறது.
வேகப்பந்து வீச்சு கூட்டணியை உருவாக்குவது எளிதானதல்ல, அப்படி கஷ்டப்பட்டு உருவாக்கப்பட்ட பவுலர்களை டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இழப்பது ஐபிஎல் போட்டிகளின் வேலைப்பளுவால் என்பதை எப்போது பிசிசிஐ-யும் வீரர்களும் உணர்வார்கள்?
வீரர்களை வைத்து பிசிசிஐயும் ஐபிஎல் -ஐ வைத்து வீரர்களும் நன்றாக சம்பாதிக்கின்றனர், ஆனால் கடைசியில் முக்கியமான டெஸ்ட் தொடரை இழப்பது பற்றி பிசிசிஐக்கும் கவலையில்லை, வீரர்களுக்கும் பெரிய அளவில் கவலையில்லை. இதுதான் பணம் செய்யும் வேலை. நம்மை அறியாமலேயே நம்மிடமுள்ள உயிர்ச்சத்துக்களை பணம் பறிமுதல் செய்து விடும். ஒரு டெஸ்ட் வீரருக்கு அதிலிருந்து காயத்தினால் விலகுவது பெரிய மன உளைச்சலை ஏற்படுத்தும், ஆனால் ஐபிஎல் பணம் அத்தகைய மனநிலையிலிருந்து வீரர்களை வெளியே கொண்டு வந்து விடுகிறது. இந்த மனநிலை ஆட்டத்தினுள்ளும் வர நீண்ட காலம் தேவைப்படாது.
உமேஷ் யாதவ் ஆஸ்திரேலியாவுக்கு எதிராகத்தான் அதிக விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார். ஆனால் மெல்போர்ன் டெஸ்ட் போட்டியின் முக்கியமான 2வது இன்னிங்சில் 3 ஓவர்களுக்கும் மேல் தாக்குப் பிடிக்க முடியாமல் உமேஷ் வெளியேறினார்.