Home /News /sports /

ரிலையன்ஸின் எம்.ஐ.எமிரேட்ஸ் அணிக்கு புதிய பயிற்சியாளர்கள் நியமனம்!!.

ரிலையன்ஸின் எம்.ஐ.எமிரேட்ஸ் அணிக்கு புதிய பயிற்சியாளர்கள் நியமனம்!!.

ராபின் சிங் - ஷேன் பாண்ட்

ராபின் சிங் - ஷேன் பாண்ட்

யுஏஇ தனியார் டி20 லீகில் எம்.ஐ.எமிரேட்ஸ் என்ற அணியைக் களமிறக்கும் ரிலையன்ஸ் நிறுவனம் அதன் பொதுமேலாளராக முன்னாள் இந்திய வீரரும் தமிழ்நாட்டு வீரருமான ராபின் சிங்கை நியமித்துள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
யுஏஇ தனியார் டி20 லீக்கில் எம்.ஐ.எமிரேட்ஸ் என்ற அணியைக் களமிறக்கும் ரிலையன்ஸ் நிறுவனம் அதன் பொதுமேலாளராக  முன்னாள் இந்திய வீரரும் தமிழ்நாட்டு வீரருமான ராபின் சிங்கை நியமித்துள்ளது.

Robinsingh


இதோடு, எமிரேட்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளராக ஷேன் பாண்ட் நியமிக்கப்பட்டுள்ளார். மும்பை இந்தியன்ஸ் பவுலிங் கோச்சாக இருப்பதோடு எம்.ஐ.எமிரேட்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளராகவும் கூடுதல் பொறுப்பு ஷேன் பாண்டுக்கு வழங்கப்பட்டுள்ளது.

Shane Bond


இவர்களோடு முன்னாள் இந்திய விக்கெட் கீப்பர் பார்த்திவ் படேல் எமிரேட்ஸ் அணியின் பேட்டிங் பயிற்சியாளராகவும் கர்நாடகாவைச் சேர்ந்த முன்னாள் இந்திய பவுலர் வினய் குமார் பவுலிங் கோச்சாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

முன்னாள் மும்பை இந்தியன்ஸ் ஆல்ரவுண்டர் ஜேம்ஸ் பிராங்க்ளின் எம்.ஐ. எமிரேட்ஸ் அணியின் பீல்டிங் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

James Franklin


ஷேன் பாண்ட் மும்பை இந்தியன்ஸ் அணியுடன் 2015-ல் இணைந்தார், இவரது காலக்கட்டத்தில் மும்பை இண்டியன்ஸ் 4 சாம்பியன் பட்டங்களை வென்றது.  ராபின் சிங் நீண்டகாலமாக 2010 முதல் மும்பை இந்தியன்ஸ் அணியுடன் இருந்து வருகிறார். பார்த்திவ் படேல் மும்பை இண்டியன்ஸின் முன்னாள் வீரர் என்பதோடு சமீபமாக 2020 முதல் அந்த அணியின் திறன் கண்டுப்பிடிப்பு குழுவிலும் இடம்பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

Also Read: Happy Birthday Ashwin: அஸ்வின் தொடக்க பேட்டராக ஆரம்பித்து உலகத் தரமான ஸ்பின்னர் ஆன கதை

எம்.ஐ.எமிரேட்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளரான ஷேன் பாண்ட் இதற்கான மகிழ்ச்சியைத் தெரிவிக்கையில், “எம்.ஐ. எமிரேட்ஸின் தலைமைப் பயிற்சியாளராக இருப்பது பெருமை அளிக்கிறது. ஒரு புதிய அணியை உருவாக்குவது உற்சாகமான வேலைதான்,இதை நான் எதிர்நோக்குகிறேன்” என்றார்.

 
Published by:Arunkumar A
First published:

Tags: IPL, Mumbai Indians

அடுத்த செய்தி