Home /News /sports /

யுஏஇ T20 லீக்: அதானி அணியில் கிறிஸ் லின், ஜோர்டான், ஹெட்மையர் - முழு அணி

யுஏஇ T20 லீக்: அதானி அணியில் கிறிஸ் லின், ஜோர்டான், ஹெட்மையர் - முழு அணி

ஹெட்மையர்

ஹெட்மையர்

ஐக்கிய அரபு எமிரேட்ஸின் யுஏஇ டி20 லீக் போட்டியில் கல்ஃப் ஜெயண்ட்ஸ் அணியை வாங்கியுள்ள இந்திய தொழிலதிபர் அதானியின் நிறுவனமான அதானி ஸ்போர்ட்ஸ் லைன் தங்கள் அணிக்கான வீரர்கள் பட்டியலில் ஆஸ்திரேலியாவின் அதிரடி வீரர் கிறிஸ் லின், இங்கிலாந்தின் கிறிஸ் ஜோர்டான், வெஸ்ட் இண்டீஸின் ஷிம்ரன் ஹெட்மையர் ஆகியோரை சேர்த்துள்ளனர்.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
    +

    கிறிஸ் லின் இன்னும் ஆஸ்திரேலியா வாரியத்திடமிருந்து என்.ஓ.சி பெறவில்லை. கிறிஸ் லின் ஐபில் கிரிக்கெட்டில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு ஆடி தொடக்கத்தில் இவரும் சுனில் நரைனும் பல பவுலர்களை ஓட விட்டுள்ளனர், செம அதிரடி வீரர் இவர். இதுவரை கிறிஸ் லின் 241 டி20 போட்டிகளில் 6,656 ரன்களை விளாசியுள்ளார். ஸ்ட்ரைக் ரேட் 143 என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

    அதானி அனியான கல்ஃப் ஜெயண்ட்ஸ் அணியின் கோச் முன்னாள் ஜிம்பாப்வே கேப்டன் ஆண்டி பிளவர். இவர்கள் அணியில் ஆலி போப், டேவிட் வீஸ், குவைஸ் அகமட் ஆகியோரும் உள்ளனர்.

    இதுவரை யுஏஇ லீகில் ரிலையன்சின் எம்.ஐ.எமிரேட்ஸ், கேகேஆர் உரிமையாளரின் அணியான அபுதாபி நைட் ரைடர்ஸ், இப்போது அதானியின் கல்ஃப் ஜெயண்ட்ஸ் அணிகள் தங்கள் வீரர்களை அறிவித்துள்ளன.

    அதானி அணியான கல்ஃப் ஜெயண்ட்ஸ் அணி வருமாறு:

    ஷிம்ரன் ஹெட்மையர் (மேற்கிந்திய தீவுகள்), கிறிஸ் ஜோர்டான் (இங்கிலாந்து), கிறிஸ் லின் (ஆஸ்திரேலியா), டாம் பான்டன் (இங்கிலாந்து), டொமினிக் டிரேக்ஸ் (மேற்கிந்திய தீவுகள்), டேவிட் வெய்ஸ் (நமீபியா), ஜேமி ஓவர்டன் (இங்கிலாந்து), ரிச்சர்ட் க்ளீசன் (இங்கிலாந்து), ரெஹான் அகமது (இங்கிலாந்து), வெய்ன் மேட்சன் (இத்தாலி), லியாம் டாசன் (இங்கிலாந்து), ஆலி போப் (இங்கிலாந்து), ஜேம்ஸ் வின்ஸ் (இங்கிலாந்து), கைஸ் அகமது (ஆப்கானிஸ்தான்).
    Published by:Muthukumar
    First published:

    Tags: T20

    அடுத்த செய்தி